கட்சி வேறுபாடு பார்க்காமல் அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்களும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட முக ஸ்டாலின் கோரிக்கை.!

0
Follow on Google News

வேளாண் சட்டத்துக்கு எதிராக தமிழகம் முழுவதும் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வரும் நிலையில், திமுக தலைவர் முக ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார் அதில். மனித குலத்திற்கும், உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பேராபத்தை விளைவிக்கும் “பி.டி. கத்திரிக்காய் கள ஆய்வை” தமிழகம் உள்ளிட்ட எட்டு மாநிலங்களில் செய்ய பா.ஜ.க. அரசு அனுமதித்திருப்பது கண்டனத்திற்குரியது விவசாயிகளை கார்ப்பரேட் கம்பெனிகளின் அடிமைகளாக்க முயற்சிப்பது போல்,

பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு நம்மூர் விவசாயிகளை அடிமையாக்கும் பா.ஜ.க. அரசின் இந்த நடவடிக்கையை அ.தி.மு.க அரசு தமிழகத்தில் எக்காரணம் கொண்டும் அனுமதிக்கக் கூடாது. நமது “விவசாயிகளுக்கு எதிரான” இந்தக் கள ஆய்வை முதலமைச்சர் திரு. பழனிசாமி முற்றிலும் நிராகரிக்க வேண்டும், வேளாண் விளைபொருட்கள் பதுக்கலுக்கு வழிவகுக்கும், விவசாயிகளை கார்ப்பரேட்டுகளுக்கு அடிமையாக்கும்,

விவசாயிகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை நிராகரிக்கும் 3 வேளாண் சட்டங்களையும் நாடு முழுவதும் விவசாயிகளும், வெகுமக்களும் எதிர்த்துப் போராடி வருகின்றனர். ஆனால், அந்தச் சட்டங்களைச் சுயநலத்திற்காக ஆதரிப்பதுடன், அவற்றால் எந்தப் பாதிப்பும் இல்லை எனக் கூறி, விவசாயிகள் மற்றும் வேளாண்மை நலனுக்கு எதிராகப் பேசி வருகிறது முதலமைச்சர் திரு. பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. அரசு,

தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்ப்பையும் மத்திய பா.ஜ.க. அரசுக்குத் தெளிவுபடத் தெரிவித்திடும் வகையில், அண்ணல் காந்தியடிகள் பிறந்தநாளான அக்டோபர் 2-ஆம் தேதி, கிராம சபைக் கூட்டங்களில், விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களுக்கு எதிராக, கட்சி வேறுபாடு பார்க்காமல் அனைத்து ஊராட்சிமன்றத் தலைவர்களும் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்!