தினமலர் நாளிதழுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்த திமுக எம்பி.! தினகரன் அலுவலகம் போல் தீயிட்டு கொழுத்த திட்டமா.?

0
Follow on Google News

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை 1 லட்சத்து 23 ஆயிரத்து 78 பேர் எழுதினார்கள். இதில் 59 ஆயிரத்து 785 பேர் தகுதி பெற்றனர். தேர்ச்சி சதவீதம் 48.57 சதவீதமாக இருந்தது. அப்போது மாநில அளவில் 23வது இடம் தமிழ்நாட்டுக்கு கிடைத்தது. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் நீட் தேர்வை 99 ஆயிரத்து 610 பேர் எழுதினார்கள். இதில் தேர்ச்சி சதவீதம் அதிகரித்து உள்ளது. இந்த ஆண்டு 57.44 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இதன் மூலம் கடந்த ஆண்டு 23-வது இடத்தில் இருந்த தமிழ்நாடு, தேர்ச்சி பட்டியலில் 1வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறது. கடந்த ஆண்டு கடைசி இடம் பிடித்த நாகலாந்து, இந்த ஆண்டும் கடைசி இடத்தை தக்க வைத்துள்ளது. இந்நிலையில் மருத்துவப் படிப்பிற்கான நுழைவுத் தேர்வில் இந்திய அளவில் தமிழகத்தை சேர்ந்த மாணவர் ஸ்ரீஜன் 8வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழகத்தை சேர்ந்த ஸ்ரீஜன் என்ற மாணவன் 720க்கு 710 மதிப்பெண்கள் பெற்று இந்திய அளவில் 8வது இடமும், தமிழகத்தில் முதலிடமும் பெற்று சாதனை படைத்துள்ளார்.

இது குறித்து தமிழ் செய்தி தாள்களில் முன்னணியில் உள்ள தினமலர் நாளிதழ், நீட் தேர்வில் தேனி ஜிவித் குமார் முதலிடம், அரசு பள்ளி மாணவர் இந்திய அளவில் சாதனை, 8வது இடம் பிடித்து திருப்பூர் மாணவரும் சாதனை, அரசியல்வாதிகள் இனி வாயை பொத்தலாம், என முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருந்தது, இது நீட் தேர்வுக்கு எதிராக அரசியல் செய்து வரும் திமுக போன்ற அரசியல் கட்சிகளுக்கு பெரும் இடியாக இருந்தது.

இதற்கு தர்மபுரி திமுக எம்பி செந்தில்குமார், தினமலர் நாளிதழ் வெளியிட்ட முதல் பக்கம் செய்தியை புகைப்படம் எடுத்து தனது டிவீட்டர் பக்கத்தில், அரசியல்வாதிகள் இனி வாயை பொத்தலாம், கொஞ்சம் ஒரு 6 மாசம் பொறுமையா இருங்க. உங்களுக்கு சிறப்பா செய்து தரப்படும் என தினமலர் நாளிதழுக்கு வெளிப்படையாக பகிரங்க மிரட்டல் வித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இந்நிலையில் திமுக எம்பியின் இந்த மிரட்டல் பதிவுக்கு, மதுரை தினகரன் அலுவலகத்தை தீயிட்டு கொளுத்தியது போன்று தினமலர் அலுவலகத்தை கொளுத்த ஏதும் திட்டமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.