மிக்சார் சாப்பிடும் எடப்பாடி அரசு.! அடிமைகளுக்கு ஏன் இந்த ஆட்சி? உதயநிதி கடும் தாக்கு..

0
Follow on Google News

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுத எழுத அவற்றை வெறுமனே வேடிக்கை பார்த்தபடி மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு என திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார், மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு திட்டம் மக்களுக்கு சாதகமா-பாதகமா என்ற அக்கறை-முன் யோசனை எதுவும் அடிமைகளுக்கு கிடையாது.

கமிஷன் அடிக்க பாஜக சொல்லும் எதையும் கேட்கலாம், எந்த எல்லைக்கும் செல்லலாம் என்பதே இவர்களின் தாரகமந்திரம். அதற்கான உதாரணமே அண்ணா பல்கலைக்கு சிறப்பு அந்தஸ்து என்ற ஏமாற்று வேலை. இதற்குக் காரணமான சூரப்பாவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி இளைஞரணி-மாணவரணி ஆர்ப்பாட்டம் நடத்தியபிறகு Institute Of Eminence தேவையில்லை என இன்று U-Turn போடுகிறார் உயர்கல்வி அமைச்சர். இன்றைக்கு IoE வேண்டாம் என்பவர்கள், பிறகு ஏன் அண்ணா பல்கலையை இரண்டாகப் பிரிக்கப்போவதாக அறிவித்தார்கள்?

சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் பல்கலைக்கழகம் தாரை வார்க்கப்படும்-கட்டணம் உயரும்-இட ஒதுக்கீடு சிக்கலாகும் என எல்லாவற்றையும் கழக தலைவர் முக ஸ்டாலின் அவர்கள் தான் சொல்ல வேண்டும் என்றால் அடிமைகளுக்கு ஏன் இந்த ஆட்சி? தலைவர் அவர்கள் சொன்னவற்றையே சொல்ல அமைச்சருக்கு இத்தனை நாள் தேவைப்பட்டதா? அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா மத்திய அரசுக்குக் கடிதம் எழுத எழுத அவற்றை வெறுமனே வேடிக்கை பார்த்தபடி மிக்சர் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது எடப்பாடி பழனிச்சாமி அரசு என தெரிவித்துள்ளார்