பள்ளிகள் திறப்பு குறித்தும் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்தும் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் விளக்கம்.!

0
Follow on Google News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகளை திறப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் ஆலோசனை நடத்தினார். கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தமிழ்நாட்டில் மார்ச் 25 முதல் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் அக்டோபர் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.

சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு குறித்தும் பாடத்திட்டங்கள் குறைப்பு குறித்தும், பள்ளி கல்வி துறை செயலாளர் தீரஜ் குமார், பள்ளி கல்வி துறை ஆணையர் வெங்கடேஷ், பள்ளி கல்வி துறை இயக்குநர் கண்ணப்பன் உள்ளிட்ட உயர் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதன்பின் செய்தியாளர்களிட்ம் பேசிய அமைச்சர், தமிழ்நாட்டில் தற்போது பள்ளிகள் திறப்பதற்கு சாத்தியக்கூறுகள் இல்லை.

பள்ளிகள் திறப்பது தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகே முடிவு செய்யப்படும். இது குறித்து முதலமைச்சர் அறிவிப்பு வெளியிடுவார்.நீட் தேர்விற்கான பயிற்சி வகுப்புகள் வரும் டிசம்பர் மாதம் முதல் தொடங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. பாடத்திட்டங்கள் குறைப்பதற்கான ப்ளூ பிரிண்ட் மாணவர்களுக்கு அளிப்பது தொடர்பாக முதலமைச்சருடன் ஆலோசனை மேற்கொண்டு 10 நாள்களுக்குள் அறிவிப்பு வெளியிடப்படும். 10 மற்றும் 12-ம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கான பள்ளி திறப்பு குறித்தும் இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது என்று தெரிவித்தார்.