தேவர் நினைவிடம் வருகை தரும் ஸ்டாலினுக்கு கடும் எதிர்ப்பு.! இந்திய அளவில் ட்ரென்ட் ஆகும் GO Back Stalin..!

0
Follow on Google News

இன்று தேவர் ஜெயந்தி விழா கொண்டாட படுவதையொட்டி, தேவர் நினைவிடம் அமைந்துள்ள பசும்பொன் கிராமத்திற்கு அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் சென்று மரியாதை செலுத்தி வருகின்றனர், இந்நிலையில் திமுக தலைவர் முக ஸ்டாலின் இன்று தேவர் நினைவிடம் செல்ல நேற்று விமானம் மூலம் மதுரை வந்துள்ளார், இன்று காலை மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு மாலை மரியாதை செய்கிறார்.

இதனை தொடர்ந்து மதுரை கோரிப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பசும்பொன் கிராமத்தில் அமைந்துள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளார், இந்நிலையில் முக ஸ்டாலின் பசும்பொன் கிராமத்தில் உள்ள தேவர் நினைவிடம் செல்ல கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது, தேசியமும் தெய்வீகமும் எனது இரு கண்கள் என வாழ்ந்து மறைந்த பசும்பொன் தேவர் நினைவிடத்துக்கு இந்து மதத்தை இழிவாக பேசிவரும் ஸ்டாலின் வருவதை கண்டித்து சமூக வலைத்தளத்தில் go back stalin என்ற ஹாஸ்டக் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.

அதில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அண்ணாதுரை இந்து மதத்தை இழிவாக பேசியதற்காக கடுமையாக எதிர்த்து அண்ணாதுரையை மன்னிப்பு கேட்க வைத்தவர் பசுபொன் தேவர் அவர்கள், ஆனால் தொடர்ந்து இந்து மதத்தை இழிவாக பேசி வரும் திமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகளை தலைமை தாங்கி வழிநடத்தும் முக ஸ்டாலின் பசும்பொன் வருவது கண்டனத்துக்கூரியது என குறிப்பிட்டு Go Back Stalin என்ற ஹாஸ்டக் ட்ரெண்ட் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.