திமுக உடன் பிரேமலதா பேச்சுவார்த்தை.! அதிமுகவுடன் சுதீஷ் பேச்சு வார்த்தை.! டபுள் கேம் விளையாடும் தேமுதிக.!

0
Follow on Google News

வருகின்ற 2021 சட்டசபை தேர்தலில் அதிமுக உடன் பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்த பாமக, தேமுதிக, புதிய தமிழகம் போன்ற கட்சிகள் அமைதியாக இருந்து வருகிறது, கடந்த நவம்பர் 21ம் தேதி சென்னை வந்த அமித்ஷா வரும் 2021 தமிழக சட்டசபை தேர்தலுக்கான அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்துள்ளார், இந்த கூட்டணி பேச்சுவார்த்தை அமித்ஷா தமிழகம் வருவதற்கு முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டதாகவும், அறிவிப்பு வெளியிடுவதற்காக தான் அவர் தமிழகம் வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தற்போது வரை அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிக வரும் சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் தொடருமா.? அல்லது திமுக கூட்டணிக்கு செல்லுமா.? என்கிற விவாதம் தமிழக அரசியல் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன் திமுக தலைவர் ஸ்டாலின் மருமகன் சபரிசனை சந்தித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் மனைவி பிரேமலதா கூட்டணி குறித்து பேசியதாக செய்திகள் வெளியானது.

இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் 21ம் தேதி தமிழகம் வந்த அமித்ஷா சென்னையில் உள்ள லீலா பேலஸ் ஹோட்டலில் தங்கியிருந்தார், நவம்பர் 21ம் தேதி இரவு அமித்ஷா தங்கியிருந்த ஹோட்டலுக்கு வந்த தேமுதிக இளைஞரணி தலைவர் சுதீஷ் கூட்டணி குறித்து அமித்ஷா உடன் பேசியதாக கூறபடுகிறது, இந்த பேச்சு வார்த்தையின் போது முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர் செல்வம் ஆகியோர் இருந்தததாக கூறபடுகிறது.

இந்நிலையில் பிரேமலதா திமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையிலும், சுதீஷ் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது இரண்டு கட்சிகளுக்கும் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறபடுகிறது. இதே போன்று கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது கடைசி கட்டம் வரை கூட்டணியை உறுதி செய்யாமல் திமுக ,அதிமுக என இரண்டு கட்சிகளுடன் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்தி பின் இக்கட்டான சூழலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக இணைந்தது குறிப்பிடத்தக்கது.