திருமணம் செய்ய நயன்தாரா விருப்பம்…வேண்டாம் என மறுத்த விக்னேஷ் சிவன்.! இது தான் காரணமாம்.!

0
Follow on Google News

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் நீண்ட நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே, நடிகர் சரத்குமார் நடித்த ஐயா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான நடிகை நயன்தாரா வல்லவன் படத்தில் நடித்த போது நடிகர் சிம்புவுடன் காதல் வயப்பட்டார், ஆனால் குறுகிய காலத்தில் சிம்பு-நயன்தாரா இடையிலான காதல் பிரிந்தது, இதற்கு காரணம் சிம்பு தன்னை ஏமாற்றி விட்டதாக நயன்தாரா தனது நட்பு வட்டாரத்தில் தெரிவித்ததாக செய்திகள் வெளியான.

இந்நிலையில் தொடர்ந்து தனது காதலை புதுப்பிக்க சிம்பு முயன்ற போது நயன்தாராவின் பிடிவாதத்தால் சிம்புவின் முயற்சி பலன் தரவில்லை, அதன் பின் நடிகர் பிரபுதேவா உடன் காதல் வயப்பட்ட நயன்தாரா, இந்த காதல் திருமணம் வரை சென்று நின்றது, இதற்கு காரணம் பிரபுதேவா தனது மனைவியை விட்டு பிரிந்துவிட்டதாக பொய் பேசி திரைமறைவில் மனைவியுடன் தொடர்பு வைத்து கொண்டு நயன்தாராவிடம் இருந்து ஏமாற்றி பணம் பறித்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சில காலம் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்த நயன்தாரா மீண்டும் நடிக்க தொடங்கிய சில படங்களில் இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலிக்க தொடங்கினார். இந்த காதல் சுமார் 5 வருடங்களை கடந்து இருவரும் காதலித்து வருகின்றனர்,இருவரும் எங்கே சென்றாலும் ஒன்றாக செல்வது, கோவிலுக்கு சென்று இருவரும் ஜோடியாக சாமி தரிசனம் செய்யும் இந்த காதல் ஜோடியின் திருமணம் எப்போது என்பது தான் மர்மமாக உள்ளது.

இந்நிலையில் விரைவில் திருமணம் செய்துகொள்ள விக்னேஷ் சிவன் தனது விருப்பத்தை நயன்தாராவிடம் சில மாதங்களுக்கு முன் தெரிவித்தபோது, அதற்கு நயன்தாரா இன்னும் சில படங்கள் நடிக்க உள்ளேன், உனக்கு என்ன வேண்டுமானாலும் கேள் வாங்கி தருகிறேன், இந்த வாழ்க்கையும் நல்லா தானே இருக்கு, இப்படியே இன்னும் சில காலம் நாம் காதலிப்போம் என தெரிவித்து ஒரு விலை உயர்ந்த புதிய கார் ஒன்றும் விக்னேஷ் சிவனுக்கு வாங்கி கொடுத்துள்ளார் நயன்தாரா.

இதனை தொடர்ந்து சமீபத்தில் நயன்தாராவாக முன் வந்து திருமணம் செய்து கொள்வோம் என விக்னேஷ் சிவனிடம் தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார், அதற்கு நமது திருமணம் உனது சினிமா வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையாக இருக்க கூடாது, தற்போது மார்க்கெட் உச்சத்தில் இருக்கும் நீ திருமணம் செய்து மார்க்கெட்டை இழக்க வேண்டாம்,திருமணம் செய்து கொள்ள நான் காத்திருக்கிறேன் நீ சினிமாவில் சாதிக்க இன்னும் நிறைய இருக்கிறது என விக்னேஷ் சிவன் திருமணத்தை தள்ளி வைத்துக்கொள்ளலாம் என நயன்தாராவிடம் தெரிவித்தாராம்.