தமிழக வீரர் நடராஜன் இதை செய்தால் நிலைப்பார். இல்லை பாலாஜி, பதான் வகைதான்.!கிரிக்கெட் விமர்சகர் எச்சரிக்கை.!

0

தமிழகத்தை சேர்ந்த கிரிக்கெட் வீரர் நடராஜனின் அபாரமான பந்துவீச்சு திறமையால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் போட்டியில், லாபுஷேன், ஆஸ்டின் அகர் ஆகிய 2 விக்கெட்டுகளையும் நடராஜன் வீழ்த்தினார். இந்திய அணிக்காக முதன்முதலில் விளையாடிய தருணம் குறித்து டி.நடராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இந்திய தேசத்துக்காக நான் களமிறங்கிய அனுபவம் எனக்குக் கனவு போன்றது. எனக்கு வாழ்த்துத் தெரிவித்த உங்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்தடுத்த போட்டிகளில் இடம்பெற விரும்புகிறேன். அதிகமான சவால்களை எதிர்நோக்குகிறேன்” என்று நடராஜன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் குறித்து பிரபல கிரிக்கெட் விமர்சகர் ஸ்டான்லி ராஜா தெரிவித்ததாவது, கபில்தேவினை தவிர இந்திய வேகபந்து வீச்சாளர் யாரும் நீண்டகாலம் நிலைத்ததில்லை, எல்லாம் காலமாற்றம் மற்றும் விஞ்ஞான ரீதியான சோதனைகள் வேகபந்து என்பது ஒரு கிரிக்கெட் வித்தை,

ஆனால் இப்போதுள்ள விஞ்ஞானம் அதை வீடியோ எடுத்து அக்குவேறு ஆணிவேறாக பிரித்து பல நிபுணர்கள் பார்த்து இன்னும் அதை போலவே பந்துவீசும் எந்திரங்களை எல்லாம் வைத்து சோதித்து எளிதாக உடைத்துவிடுகின்றார்கள் சுழற்பந்து கொஞ்சம் வித்தியாசமானது, காரணம் அது களத்தின் தன்மையினை பொறுத்தும் பந்து வீச்சாளர் திறமை பொறுத்தும் மாறுபட கூடியது, முரளீதரன் போன்றவர்கள் நின்றது அப்படித்தான்

மற்றபடி பவுலர்கள் வந்த புதிதில் ஆடலாம் ஆனால் மிக எளிதாக அவர்கள் பந்து வீச்சினை உடைக்கும் நுட்பத்தை எதிரணி கற்றுவிடும் ஒரே தீர்வு பந்துவீச்சாளர்கள் புது புது நுணுக்கத்தை புகுத்தி கொண்டே இருக்க வேண்டும் அது அல்லாது நீடித்து நிற்க முடியாது இது மிக வேகமான காலம், எல்லா விஷயங்களிலும் வேகமாக மாறி கொண்டே இருக்காவிட்டால் நிலைக்கமுடியாது, கிரிக்கெட்டும் அதற்கு விதிவிலக்கு அல்ல‌

நடராஜன் இப்பொழுதுதான் களத்துக்கு வந்திருக்கின்றார், இன்னும் அவர் போக வேண்டிய தொலைவு நிறைய உண்டு இன்னும் தன் வித்தையினை அவர் தொடர்ந்து மேம்படுத்துதல் வேண்டும் மிக கடுமையான பயிற்சிகளின் மூலம் தன்னை அடிக்கடி மேம்படுத்தி கொண்டால் சமிந்தா வாஸ், வாசிம் அக்ரம் போல் அவரும் நிலைப்பார். இல்லை பாலாஜி, பதான் வகைதான் என ஸ்டான்லி ராஜன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here