ஸ்டாலின் மருமகனுடன் அன்புமணி ராமதாஸ் ரகசிய சந்திப்பு.! அதிமுகவில் இருந்து திமுகவுக்கு தாவுகிறதா பாமக.?

0
Follow on Google News

ஒவ்வொரு தேர்தலுக்கு அதிமுக, திமுக என மாற்றி மாற்றி கூட்டணி அமைத்து போட்டியிட்டு வரும் பாமக, வரும் சட்டசபை தேர்தலில் எந்த கூட்டணியில் இடம் பெற போகிறது என்பது அரசியல் பார்வையாளர்கள் மட்டுமின்றி பாமக தொண்டர்களுக்கும் குழப்பமாகவே உள்ளது, 2014 நாடாளுமன்ற தேர்தலின் போது பாஜக, தேமுதிக போன்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்து மூன்றாவது அணியில் இடம் பெற்ற பாமக, அடுத்து வந்த 2016 சட்டசபை தேர்தலில் அன்புமணி ராமதாஸை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்து போட்டியிட்ட அணைத்து தொகுதிகளிலும் தோல்வியை சந்தித்தது.

இதனை தொடர்ந்து 2019 நாடாளுமன்ற தேர்தலின் போது, கூட்டணி தொடர்பாக அதிமுக உடன் பாமக நிறுவனர் ராமதாஸ் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே, மறுபக்கம் திமுகவுடன் அன்புமணி கூட்டணி பேச்சு வார்த்தை நடத்திய செய்தியும் வெளியானது, தேர்தலுக்கு ஒரு மாதம் வரை அதிமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து வந்த பாமக, நாடாளுமன்ற தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணியில் இடம் பெற வாய்ப்புகள் இல்லை, திமுக கூட்டணியில் தான் இடம் பெரும் என அனைவரும் ஆருடம் தெரிவித்து வந்தனர், அந்த அளவுக்கு அதிமுகவை மிக கடுமையாக பாமக விமர்சனம் செய்து வந்தது.

ஆனால் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகளுடன், மாற்றி மாற்றி பேச்சு வார்த்தை நடத்தியதில் அதிமுகவுடன் சுமுக முடிவு எட்டப்பட்டு கூட்டணியில் இடப்பெற்றது பாமக, இதற்கு அதிமுகவில் பெரும் பணத்தை பெற்றுவிட்டு அதிமுகவுடன் கூட்டணி அமைத்துவிட்டதாக திமுக சார்பில் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது, இந்நிலையில் பாமக போட்டியிட்ட அணைத்து தொகுதியிலும் அன்புமணி ராமதாஸ் உட்பட அனைவரும் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தோல்வியை சந்தித்தனர்.

இந்நிலையில் விரைவில் சட்டசபை தேர்தல் வர இருப்பதால், மீண்டும் பாமக டபுள் கேம் விளையாட தொடங்கியுள்ளது, அதிமுகவுடன் ராமதாசும், திமுகவுடன் அன்புமணியும் பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளனர், இதனை தொடர்ந்து சமீபத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் மருமகன் சபரிசனை ரகசியமாக சந்தித்து பேசியுள்ளார் அன்புமணி ராமதாஸ் என்கிற தகவல் வெளியாகியுள்ளது, இந்த சந்திப்பின் போது வரும் சட்டசபை தேர்தலுக்கான கூட்டணி குறித்து பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து சமீபத்திய ராமதாஸ் அறிக்கை ஒன்றில் திமுகவை மிக கடுமையாக விமர்சனம் செய்து ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார், இதனால் கோவம் அடைந்த அன்புமணி நான் தான் திமுகவுடன் டச்சில் இருப்பது தெரியுமில்ல, பிறகு எதற்கு இது போன்ற அறிக்கை வெளியிட்டு குழப்பத்தை உருவாக்க வேண்டும் என கூற, இருவருக்கு கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்நிலையில் வரும் தேர்தலில் பாமக எந்த கூட்டணியில் இடம் பெரும் என்பது கடந்த தேர்தல் போன்று தேர்தலுக்கு ஒரு மாதம் முன்பு தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் இது போன்ற செய்திகளை உங்கள் வாட்ஸாப் செயலில் பெற 8925154074 என்ற எண்ணிற்கு “ACT NEWS” என்று மெசேஜ் செய்யவும் .