நடராஜன் வீசும் பந்துகள் சிட்னி டெஸ்ட்டில் கை கொடுக்காது.! எச்சரிக்கும் அவரது பயிற்சியாளர்.!

0
Follow on Google News

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையே நடக்கும் கிரிக்கெட் டெஸ்ட் தொடரின் 3வது டெஸ்ட் போட்டி, சிட்னியில் இம்மாதம் ஜனவரி 7ம் தேதி துவங்குகிறது. இந்த போட்டியில் விளையாட தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் தேர்வாகியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் உற்சாகம் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சிட்னி டெஸ்ட் போட்டியில் நடராஜனின் அவரது பயிற்சியாளர் வாசு தெரிவித்துள்ளதாவது.

நான் நடராஜனுடன் 2 ஆண்டுகள் பணியாற்றியுள் ளேன். அவர் ஒரு சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என் பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. இப்போது டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதற்காக அவருக்கு என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதேநேரம், டெஸ்ட் போட்டிகளில் அவர் எடுத்ததும் மிகப்பெரிய சாதனைகள் புரிவார் என்று நான் ஆரூடம் சொல்லவில்லை. அவர் எந்த ஒரு நுணுக்கத்தையும் எளிதில் கற்றுக்கொள்பவர்.

அந்த வகையில், டெஸ்ட் போட்டியின் நுணுக்கங்களை அவர் விரைவில் கற்றுக் கொண்டு ஜொலிப்பார். டெஸ்ட் போட்டியில் அவருக்கு எந்தளவுக்கும் வாய்ப்புகள் வழங்கப்படுகிறதோ, அந்தளவுக்கு அவர் கற்றுக் கொண்டு தன்னை நிரூபிப்பார் என தெரிவித்த பயிற்சியாளர், ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் டெஸ்ட் விளையாடுவது, அவ்வளவு எளிதல்ல. 5 பந்துகளை ஆடுகளத்தில் எகிறச் செய்ய வேண்டும். ஒரு துல்லியமான கோட்டில் பந்து வீச வேண்டும். மித வேகத்தில் வீசப்படும் வேகப்பந்துகள், யார்க்கர்கள் டெஸ்ட்டில் கை கொடுக்காது.

பவுன்சர்கள் மட்டுமே கை கொடுக்கும். எனவே, யார்கர் என்ற ஆயுதத்துடன், பவுன்சர்களையும் நடராஜன் கையில் எடுக்க வேண்டும். இவ்வாறு நடராஜனின் அவரது பயிற்சியாளர் வாசு தெரிவித்துள்ளார். இந்நிலையில் யாக்கர்கள் கைகொடுக்காது,மித வேகத்தில் வீசப்படும் வேகப்பந்துகள் என பயிற்சியாளர் குறிப்பிட்டுள்ளது, ஆடுகளத்தில் பந்துகளை எகிறச் செய்ய கடும் பயிற்சியில் நடராஜன் மேற்கொண்டு வருகிறார்.