பனி காலத்தில் ஏற்படக்கூடிய சளி, இருமல் இருந்து நம்மை பாதுகாக்க தூதுவளைத் துவையல் செய்வது எப்படி.?

0
Follow on Google News

அனைவருக்கும் வணக்கம், இன்று நம் ஆரோக்கிய சமையலில் பார்க்கப்போவது தூதுவளைத் துவையல். இந்த துவையல் பனி காலத்தில் ஏற்படக்கூடிய சளி ,இருமல் இருந்து நம்மை பாதுகாக்கிறது. இதற்கு தேவையான பொருட்கள்:

★தூதுவளை இலைகள் -25,
★சிறிதளவு -நெய்/ நல்லெண்ணெய்,
★பூண்டு -3,
★மிளகு -1 தேக்கரண்டி,
★சீரகம்-1 தேக்கரண்டி,
★மிளகாய் வற்றல்-2,
★தேங்காய் பூ-2 தேக்கரண்டி.

செய்முறை: தூதுவளை இலைகளை நெய் அல்லது நல்லெண்ணையில் வதக்கி, அதே எண்ணெயில் பூண்டு, மிளகு, சீரகம் மற்றும் மிளகாய் வத்தல் சேர்த்து வதக்கவும்.தேங்காய் பூவுடன் வதக்கி வைத்த தூதுவளை இலைகள், மிளகு, சீரகம், பூண்டு, மிளகாய் வத்தல் எல்லாம் சேர்த்து அரைக்கவும்.

இப்போது ஆரோக்கியமான தூதுவளைத் துவையல் சுவையாக நமக்கு கிடைத்து விட்டது. நீங்கள் அனைவரும் உங்கள் வீட்டிலும் செய்து பார்த்து பயன்பெறுங்கள். நன்றி ~க. சுகன்யா தேவி முத்துராமன், இந்த செய்முறையை வீடியோவில் காண கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்யவும்.