நடிகர் அஜித்தின் 50வது பிறந்த நாள் அன்று வெளியாகிறது வலிமை பட அப்டேட் மகிழ்ச்சியில் ரசிகர்கள்…

0
Follow on Google News

வலிமை படத்தின் புதிய அப்டேட். நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வெளிவந்த நேர் கொண்ட பார்வை என்ற திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வலிமை என்ற திரைப்படத்தின் மூலம் இவர்கள் கூட்டணி சேர்ந்துள்ளனர்.வலிமை படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு முதல் தொடங்கியது.

கொரோனா லாக்டவுன் காரணமாக படபிடிப்பு தொடர முடியாத சூழல் ஏற்பட்டது. இந்த ஆண்டு முதல் கொரோனா காட்டுக்குள் கொண்டு வரப்பட்டதால் படப்பிடிப்பு தொடங்கி முழுவதுமாக முடிவடைந்தது. தற்போது டீசர் டிரைலர் மற்றும் போஸ்டர் போன்ற எடிட்டிங் பணி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் அஜித் ரசிகர்கள் டைட்டிலுக்கு பிறகு வலிமை படத்தின் அப்டேட் வெளிவராததால் காரணத்தால் இயக்குனரிடம் தயாரிப்பாளரிடம் வலிமை படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர்.

இவர்களிடம் அப்டேட் காண எந்த ஒரு அறிவிப்பும் வராததால் அஜித் ரசிகர்கள் புதிய யுத்தியை கையிலெடுத்தார். சில சினிமா பிரபலங்கள், தமிழக முதல்வர் எடப்பாடி, தமிழகம் வந்த பிரதமர், கிரிக்கெட் பிளேயர் என யாரையும் விட்டுவைக்காமல் பொதுவெளியில் அவர்களிடம் வலிமைப்படுத்தி நான் பேட்டை கேட்டு வைரலான அஜித் ரசிகர்கள். அஜித் ரசிகர்கள் செய்த காரியம் நடிகர் அஜித்திற்கு முகம் சுளிக்க செய்தது. தனது ரசிகர்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் விரைவில் வலிமை படத்திற்கான அப்டேட்டை படக் குழுவினருடன் இணைந்து விரைவாக வெளியிடப்படும் என்றும் அதுவரை தாங்கள் பொறுமை காக்க வேண்டும் என்றும் அஜீத் கூறியுள்ளார். இதற்குப் பின்பு இவரது ரசிகர்கள் கொஞ்சம் பொறுமை காத்தனர். தயாரிப்பாளர் போனி கபூர் வலிமை படத்திற்கான அப்டேட் மே1 நடிகர் அஜிதின் 50வது பிறந்தநாள் அன்று வெளியாகும் என டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.