இணையத்தில் பட்டையைக்கிளப்பும் கர்ணா டீசர்…!

0

அனைவரும் எப்போது வரும் என எதிர்பார்த்த தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படத்தின் டீசர் சில நாட்கள் முன்பு வெளியானது. தனுஷ் நடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் படைப்பில் கர்ணன் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 9ஆம் தேதி கர்ணன் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கிடையில் படத்தின் டீசர் பட்டைய கிளப்பி உள்ளது.

நேற்று முன்தினம் மார்ச் 23 அன்று கர்ணன் திரைப்படத்தின் டீசர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டது. வெளிவந்த இரண்டு நாட்களில் 6மில்லியன் பார்வையாளர்களை கடந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முதலில் தலை இல்லாத ஒரு கடவுளின் உருவத்தில் இந்த கர்ணன் டீசர் தொடங்குகிறது. பிறகு சிறு பெண் குழந்தைகள் அம்மன் உருவம் கொண்ட முகமூடியை அணிந்துள்ளனர்.

வயதான மூதாட்டி ஒருவர் கோழிக்குஞ்சுகளை வளர்கிறார் அதை ஒரு பருந்து தூக்கிக்கொண்டு போக அந்த மூதாட்டி பருந்தை பார்த்து நான் எவ்வளவு செல்வியும் நீ என் கோழி குஞ்ச தூக்கிட்டல உன் காலை ஒடிக்க ஒருத்தன் வருவான் பாரு என்று பேசும் டயலாக் படத்தின் கதையை வெளிக்காட்டுகிறது. மேலும் சந்தோஷ் நாராயணன் இசையில் டீசல் நகர்த்திச் செல்ல ஒரு கிராமத்தில் உள்ள மக்கள் தாக்கப்பட்டு யாருக்காகவோ காத்திருக்கிறார்கள்.

கையில் மூன்றே அடி கத்தியுடன் போர் குதிரை மீது அமர்ந்து குதிரை சத்தத்துடன் குறிஞ்சி நிலத்தை கடந்து அந்த கிராமத்திற்கு நுழைகிறார் வீரன் கர்ணன் தனுஷ். கிராம மக்கள் மொத்தமாக எழுந்து வருவதைப் பார்த்தாள் இவருக்காக காத்திருந்தார்களே… கர்ணா என்ற மக்களின் கோரக் குரல் அதில் “கர்ணா கர்ணா காட்டுப்பூச்சி பேசுறேன் டா… ஒருத்தனையும் விடாதடா அடிச்சு துரத்து டா… கர்ணா, அடிச்சு துரத்து டா… கர்ணா அழுகைக் குரல் உடன் ஒரு மூதாட்டி சொல்வதுடன் டீசர் முடிவடைகிறது. டீசரை பார்க்கும்போதே திரைப்படத்திற்கான மிகுந்த எதிர்பார்ப்பு உருவாகிறது. ஏப்ரல் 9 வரை காத்திருப்போம் கர்ணா…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here