யானையுடன் ஒரு காதல் காவியம் கும்கி 2 விரைவில்…

0

தமிழ் சினிமாவில் 2012ஆம் ஆண்டு வெளியாகி மிக பெரிய அளவில் பேசப்பட்ட திரைப்படம் தான் கும்கி. தமிழ் சினிமாவில் ஒரு புதிய காதல் காவியத்தை உருவாகிய கும்கி. இந்தப்திரைப்படத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் இயக்குனர் பிரபுசாலமன் படைப்பில், தயாரிப்பாளர் லிங்குசாமி தயாரித்திருந்தார்.

மேலும் கும்கி திரைப்படத்தில் தம்பி ராமையா, அஸ்வின் ராஜா என பலர் நடித்திருந்தனர். இந்த திரைப்படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர் டி இமான் இசையில் ஒவ்வொரு பாடல்களும் மனதில் இசைக்க தொடங்கியது. தற்போது 8ஆண்டுகளுக்கு பிறகு ‘கும்கி 2’ படம் பற்றி அறிவிப்பு வெளியாகி ரசிகர்களிடம் எதிர்ப்புகளை‌ ஏற்படுத்தி வருகிறது.

காதல், காமெடி மற்றும் திரில்லர் என பல கலந்த இயற்கை சூழலில் இந்த திரைப்படம் அமைந்தது. கும்கியில் கொம்பன் என்ற காட்டு யானையை விரட்ட கும்கி தேவைப்படுகிறது. ஆனால் அந்த நேரத்தில் கும்கி யானை கிடைக்கவில்லை. விக்ரம் பிரபு வளர்ந்த யானை மாணிக்கம் கும்கி யானை வரும் வரை தான் வளர்த்த மாணிக்கத்தை அந்த கிராமத்திற்கு கூட்டிச்செல்ல, அங்கிருந்த லட்சுமி மேனனுடன் காதல் வலையில் விழுந்தார் விக்ரம் பிரபு.

சுவாரஸ்யமான காதல் கதையுடன் நகர்கிறது இந்த திரைப்படம் தற்போது திரைப்படத்தின் இரண்டாவது பாகம் வெளியாக இருப்பதாக இயக்குனர் பிரபு சாலமன் தகவல் வெளியிட்டுள்ளார். கும்கி முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தின் கதை மிக பிரமாண்டமாக அமைந்திருப்பதாக கூறியுள்ளார். வருகின்ற சட்டமன்ற தேர்தலுக்கு பின்பு இந்த படம் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here