முக ஸ்டாலினின் அந்த ரகசிய வீடியோவை வெளியிடுவேன்.! அமைச்சர் மிரட்டல்… பீதியில் முக ஸ்டாலின்.! என்ன வீடியோ தெரியுமா.?

0
Follow on Google News

தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நெருங்குவதை யொட்டி பிரசாரம் களைகட்டி வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க தேர்தல் அச்சம் தலைவர்களிடம் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் எதிரி கட்சிகளை பிரச்சாரத்தில் போட்டிப்போட்டு விமர்சிப்பார்கள். ஒவ்வொரு நாட்களும் தேர்தல் கருத்துக்கள் ஒவ்வொரு கட்சிக்கு சாதகமாக மாறிக்கொண்டே இருக்கும்.

எனவே, வெற்றி பெறுவதே நோக்கமாக இருப்பதால் எதிர்கட்சிகளின் வாயை மூட, அவர்கள் சம்பந்தப்பட்ட சில வீடியோ ஆதாரங்களை வெளியிட்டு தங்களுக்கு சாதகமாக அதிகரித்துக் கொள்வார்கள். அதேபோல் ஒன்று இப்போது நடைபெற்று வருகிறது. அமைச்சர் கடம்பூர் ராஜு திமுக சம்பந்தப்பட்ட ஒரு வீடியோ வெளியிடப் போவதாக கூறியுள்ளார். இந்த வீடியோவில் என்ன இருக்கிறது என அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

அப்போது தான் அமைச்சர் கடம்பூர் ராஜு என்ன வீடியோ என்று சம்பந்தப்பட்ட விவரத்தைக் கூறினார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த போது, எடப்பாடி அவர்கள் முதல்வராக பதவி ஏற்றார். அப்போது ஓபிஎஸ் தனி அணியாக பிரிந்தார். இதனால் எடப்பாடி அவர்களுக்கு பெரும்பான்மையை நிரூபிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது சபாநாயகர் முன்பு சட்டசபையில் வாக்கெடுப்பு நடைபெற்றது அதை இரகசியமாக நடத்த எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்தார்.

ஆனால் அந்த கோரிக்கையை சபாநாயகர் ஏற்க மறுத்ததால் திமுக எம்எல்ஏக்கள் சட்டசபை என்று கூட பார்க்காமல் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து கொண்டு கத்தி கூச்சலிட்டனர். சபாநாயகர் உடனடியாக திமுக எம்எல்ஏ எங்களை வெளியேற்ற உத்தரவிட்டார். அப்போது திமுகவின் தலைவரை சட்ட சபையை சேர்ந்த சில காவலாளிகள் தூக்கிச் செல்லும்போது சட்டை தாறுமாறாக கிழிந்தது. அன்று இந்த நிகழ்வு ஓரிரு நிமிடங்கள் வீடியோவாக வெளிவந்தது.

ஆனால் முழு வீடியோவை விடாமல் அதிமுக. தற்போது அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜு இந்த முழு வீடியோவை வெளியிடுவதாக திமுகவை மிரட்டியுள்ளார். இந்நிலையில் இதுகுறித்து விசாரித்ததில் சட்டமன்றத்தில் முக ஸ்டாலின் சட்டையையே கிழித்து கொண்டு வெளியில் வருவதற்கு முன்பு சட்டையை தனக்கு தானே கத்திரிகோள் வைத்து கிழித்த முக ஸ்டாலினின் வீடியோ, அமைச்சர் கையில் இருப்பதாகவும் அதை தேர்தல் நெருங்கும் முன் வெளியிட திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோ வெளி வந்தால் திமுகவின் தலைமையின் என்ன ஆகும் என்று வந்தால் தான் தெரியும் என்கின்றனர் விவரம் அறிந்தவர்கள்.