கோடை வெயில் வெப்பம் அதிகமாக இருக்கா.? வாட்டர் கொடுத்து வாக்கு கேட்டு நூதன முறையில் குஷ்பு பிரச்சாரம்.!

0
Follow on Google News

குஷ்பூ தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் முதல் முதலில் குஷ்பூ என்ற நடிகைக்கு தான் கோயில் கட்டினார்கள். குஷ்பூவுக்கு கோயில் கட்டும் அளவிற்கு அவருக்கு என தனி ரசிகர் கூட்டமே இருந்தது. நடிகைகளிலேயே முதலில் ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகையாக இருந்தவர் குஷ்பூ.

தமிழகத்தில் உணவுகளில் பிரபலமானது என்றால் இட்லி தான். குஷ்பூவுக்கு கோயில் தான் கட்டினார்கள் என்றால், சாப்பிடும் உணவிற்கும் குஷ்பூ பெயரை தான் வைத்துள்ளார்கள். மிகவும் பிரபலமான இட்லிக்கு குஷ்பூ இட்லி என்று பெயர் வைத்துள்ளனர். இப்படி தமிழகத்தில் பிரபலமான குஷ்பூ திமுக, காங்கிரஸ் பல கட்சிகளில் இருந்து இப்போ பாஜகவில் இணைந்து, வருகிற சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட உள்ளார்.

ஆயிரம் விளக்கு தொகுதியில் பிரச்சாரத்தை மேற்கொண்டு வரும் குஷ்பூ வாக்காளர்களை கவர, வாட்டர் பாட்டிலில் குஷ்பூவிற்கு ஆதரவாக ஓட்டு கேட்டு ஸ்டிக்கர் ஒட்டி, அதனை வாக்காளர்களுக்கு வழங்கி வருகின்றனர். கோடை வெயில் வெப்பம் அதிகமாக உள்ளதால் குஷ்பூ இலவசமாக கொடுத்த வாட்டர் பாட்டிலை தரும் யாரும் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். இதான் மூலம் மக்களிடம் நல்ல பெயர் வாங்க வாட்டர் பாட்டிலையும் கொடுத்து வாக்காளர்களிடம் ஓட்டும் கேட்டாச்சு. வருகிற சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள பாஜக புதிய கையாளத் தொடங்கிவிட்டனர் .