அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் இல்லையா?

0
Follow on Google News

தெலுங்கு திரையுலகத் நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமாரன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘புஷ்பா’. இந்த திரைப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தெலுங்கு, மலையாளம், தமிழ், இந்தி மற்றும் கன்னட என ஐந்து மொழியில் இந்த படம் வெளியாக உள்ளது.

புஷ்பா திரைப்படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் பிரபல நடிகை ராஷ்மிகா. தேவிஸ்ரீ பிரசாத் இசையில் திரைப்படம் அமைய இருக்கிறது. டோலிவுட்டின் சிறந்த நடிகர்களில் அல்லு அர்ஜுனும் ஒருவர். புஷ்பா திரைப்படத்தில் இவருக்கு வில்லனாக தமிழ் சினிமாவில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நடிகர் விஜய் சேதுபதி நடிக்க இருந்ததார். சில காரணங்களால் தற்போது மலையாள நடிகர் ஒருவர் நடிக்க உள்ளார்.

வேறு யாரும் இல்லைங்க… நம்ம தமிழ் சினிமாவில் சிவகார்த்திகேயன், நடிகை நயன்தாரா நடித்த வேலைக்காரன் திரைப்படத்தில் ஏற்கனவே வில்லனாக நடித்திருந்த ஃபகத் ஃபாசில் தான். மலையாள திரையுலகில் இவர் ஹீரோவாக நடித்து வருகிறார். இவர் அல்லு அர்ஜுன் நடிக்கும் புஷ்பா திரைப்படத்தின் வில்லனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக படக்குழுவினர் சமூக வலைத்தளங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்