“அது ஒரு யானை கூட்டம்” மிரட்டி வரும் சுல்தான் ட்ரைலர்…

0

ஹீரோவாக நடிகர் கார்த்தி, ஹீரோயினாக ராஷ்மிகா மந்தண்ணா நடிப்பில் இயக்குனர்பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் வெளிவர இருக்கிறது சுல்தான் திரைப்படம். யோகிபாபு, பொன்னம்பலம் போன்ற நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை டிரீம் வாரியர் பிக்சார்ஸ் தயாரித்துள்ளது. விவேக் சிவா, மெர்வின் ஸோலோமன் இசையில் படம் அமைந்திருக்கிறது.

சுல்தான் திரைப்படத்தின் டிரெயிலர் இரண்டு தினங்களுக்கு முன்பு யூடியூபில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. காமெடி, காதல், ஆக்சன் கலந்து உருவாக்கப்பட்ட சுல்தான் ஏப்ரல் 2-ஆம் தேதி திரையரங்கை மிரட்ட வருகிறது. நெப்போலியனும் மற்றும் கே ஜி எஃப் வில்லன் கருடா போன்ற முக்கிய நடிகர்களும் நடித்துள்ளனர். இது திரைப்படம் திண்டுக்கல் மலைக்கோட்டையில் படப்பிடிப்பு நடைபெற இருக்கும் போது பல சர்ச்சைகளிலும் சிக்கி உள்ளது.

தெலுங்கு திரையுலகை கலக்கிக் கொண்டிருக்கும் நடிகைதான் ராஷ்மிகா. இப்போ தமிழ் திரையுலகை சுண்டி இழுக்கும் கண்களால் ஒரு கலக்கு கலக்க போகிறார். நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த ரெமோ திரைப்படத்தை இயக்கியவர் தான் சுல்தான் திரைப்படத்தினை இயக்கி பாக்யராஜ் கண்ணன். காதல் காமெடி என்று அமைந்து வெற்றியை கொடுத்தது போல இந்த சுல்தான் வெற்றியை கொடுக்குமா?
படக்குழுவினர் முழு முயற்சியுடன் திரைப்படத்தை கச்சிதமாக அமைந்து விட்டது தற்போது திரையரங்கில் வெளியாகி வெற்றியை கொடுக்குமா படக்குழுவினர் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here