மதுரையில் கேட்டதைக் கொடுக்கும் கபாலீஸ்வரரி அம்மன் கோயில்…

0
Follow on Google News

மதுரையில் என்றாலே தினமும் திருவிழா கோலாகலமாக தான் இருக்கும். கடம்பவனம், தூங்காநகரம் போன்ற மதுரைக்கு பல பெயர்களும் உண்டு. கலாச்சாரத்தில் நாகரீகத்தின் கடைபிடித்து வரும் ஒரே மாவட்டம் என்றால் அது மதுரை தான். அப்படிப்பட்ட இந்த மதுரையில் சக்தி வாய்ந்த பல ஆன்மீகத் தளங்களும் அமைந்துள்ளது.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்திலிருந்து 4 1/2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மாடக்குளம் என்ற கிராமம். இந்த மாடக்குளம் மிக இயற்கையான சூழ்நிலையில் அமைந்துள்ளது. மாடக்குளம் கம்மாய் தான் மதுரையில் மிகப் பெரிய கம்பாய். கம்மாயில் கரையோரத்தில் மலையின் மீது தான் அமைந்துள்ளது கபாலீஸ்வரரி ஆலயம்.

இதுவரை இந்த இடம் அந்தப் பகுதியில் உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்க வாய்ப்புண்டு. இந்த மலையை பயணிக்கும் ஒவ்வொரு நொடியும் இயற்கை காற்றை சுவாசிக்கலாம். மலையைச் சென்றடைந்த பிறகு அங்கு ஒரு ஆலமரத்தின் அருகில் காமாட்சி அம்மன் ஆலயம் அமைந்திருக்கும்.

இந்த அம்மன் மிகவும் சக்தி வாய்ந்த அம்மனாக உள்ளதால் படம் வரும் வெள்ளிக்கிழமை விசேஷ பூஜைகள் நடைபெறும். இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொள்வார்கள்.மலையின் உச்சியில் அமர்ந்து கொண்டு மதுரை பார்த்தல் மிக அழகான கட்சி. அந்த மாலையில் மீது அமர்ந்து மாடக்குளம் கண்மாய் பார்க்கும் போது கடல் போல் இருந்திருக்கும் காட்சி அழகான இயற்கையுடன் இந்த அம்மனை வழிபட்டு வரும்

ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு நிம்மதியுடன் செல்வார்கள். வருடம் வருடம் புரட்டாசி மாதம் அன்று மலையின் மீது உள்ள கபாலீஸ்வரரி அம்மனுக்கு காப்பு கட்டி மாலையின் கீழே உள்ள கபாலீஸ்வரரி அம்மன் கோயில் ஆலயத்துக்கு கொண்டு வந்து கொலுவுக்கு வைப்பார்கள். மிகச் சிறப்பாக நடைபெறும் இந்த அம்மனிடம் வேண்டிய அனைத்தும் நடைபெறுவதால் வாரம் வாரம் பெண்களின் கூட்டம் அலைமோதிக் கொண்டு இருக்கிறது. மீண்டும் அடுத்த ஆலய தரிசனத்தை சந்திக்கலாம்.