கொரோன தொற்றின் பாதிப்பு தமிழகத்தில் தினசரி அதிகரிப்பு.! 24 மணிநேரத்தில் 108 உயிரிழப்புகள்.!

0
Follow on Google News

தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப் ஆகிய 5 மாநிலங்களில் கொவிட் தொற்றின் தினசரி பாதிப்பு தொடர்ந்து அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் ஏற்பட்ட பாதிப்புகளில் 82 சதவீதம் இந்த ஐந்து மாநிலங்களில் பதிவாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 18,327 புதிய பாதிப்புகள் நாட்டில் ஏற்பட்டுள்ளன.

அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 10,216 பேரும், கேரளாவில் 2776 பேரும், பஞ்சாபில் 808 பேரும், கர்நாடகாவில் 677 பேரும், தமிழகத்தில் 543 பேரும் புதிதாக தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். நாட்டில் தற்போது கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1,80,304 ஆகப் பதிவாகியுள்ளது. இது நாட்டின் ஒட்டு மொத்த பாதிப்பில் 1.61 சதவீதமாகும்.

இன்று காலை 7 மணி வரை, நாடு முழுவதும் 3,57,478 முகாம்களில்‌ 1.94 கோடி (1,94,97,704) பயனாளிகளுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 69,15,661 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (முதல் டோஸ்), 33,56,830 சுகாதாரப் பணியாளர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), 63,55,989 முன்கள ஊழியர்களுக்கும் (முதல் டோஸ்), 1,44,191முன்கள ஊழியர்களுக்கும் (இரண்டாவது டோஸ்), இதர உடல் உபாதைகள் உள்ள 45 வயதுக்கு மேற்பட்டோரில் 3,46,758 பேருக்கும் (முதல் டோஸ்), 60 வயதைக் கடந்த 23,78,275 பயனாளிகளுக்கும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 108 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.