தங்கம் வென்றார் தல அஜித் ! தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் தேர்வாகியுள்ளார் அஜித்.!

0
Follow on Google News

தல அஜித் என்று சொன்னாலே தமிழ்நாடு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலும் தெரியாத ஆளே இல்லை. பல நட்சத்திரங்களும், நடிகர்களும், நடிகைகளும், ரசிகர்களாய் இருப்பது தல அஜித்துக்கு மட்டுமே சாத்தியம். தல அஜித் அவர்கள் படத்தில் நடிப்பது மட்டுமின்றி பல திறமைகளை கொண்டுள்ளார் (Car Race, Drone, Pilot, Rifle Shooting, Daksha Team).

கடந்த 3ம் தேதி முதல் ஆவடியை அடுத்த வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்படை மூன்றாம் அணியில், 5 நாட்களுக்கு துப்பாக்கி சுடும் போட்டி நடைபெற்றது. இதில் சீனியர் பிரிவில் நடிகர் தல அஜித்குமார் பங்கேற்று தங்கம் மற்றும் வெள்ளி உட்பட 6 பதக்கங்களை தனதாக்கினார். இதன்மூலம் அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் தேசிய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் பங்கேற்க நடிகர் தல அஜித் தேர்வாகியுள்ளார்.

நடிப்பதில் மட்டும் ஆர்வம் காட்டாமல் பல துறைகளில் ஆர்வம் காட்டுகிறார். இது தமிழ் சினிமாவுக்கு கிடைத்த பெருமை. இதையடுத்து நேற்று துப்பாக்கி சுடும் போட்டியில் எடுத்த புகைப்படம் வெளியானதை அடுத்து தல ரசிகர்கள் உற்சாகத்துடன் கொண்டாடினர். மதுரை தல ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று பிளக்ஸ் அடித்து கொண்டாடினர்.