ஆண்களுக்கு இணையான ஊதியம் வழங்க உலக அளவில் நடந்த மாபெரும் போராட்டம்.!உலக மகளிர் தினம் உருவானது எப்படி.?

0
Follow on Google News

இன்று உலக மகளிர் தினம் (International women’s Day). ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி அன்று உலகமெங்கும் கொண்டாடப்படுகிறது. ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட இந்த நாளில் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். ஆணாதிக்க சமுதாயத்தில் இருந்து பெண்களுக்கான உரிமைகளை வென்றெடுத்த நாள் இது என்றே குறிப்பிட வேண்டும். பெண்களுக்கான சமத்துவம், உரிமைகளை வலியுறுத்துவதற்காகவும் மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

18ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் மற்றும் அலுவலகங்களில் ஆண்கள் மட்டுமே பணியாற்றினர். வீட்டு வேலைகளை செய்வதற்காக பெண்களை வீட்டுக்குள்ளேயே முடக்கி வைத்தனர். பெரும்பாலான பெண்களுக்கு ஆரம்ப கல்வி கூட தரப்படாமல் மறுக்கப்பட்டது. அடுப்பூதும் பெண்களுக்கு படிப்பெதற்கு என்ற அந்த காலம் ஆனால் கல் உடைக்கும் வேலையில் இருந்து கணினி துறை வரை அனைத்து துறைகளிலும் இன்றைக்கு மைல்கல்லாக மகளிர் விளங்கும் அளவுக்கு சாதனை படைத்து உயர்ந்துள்ளன என்றால் மிகையில்லை.

இவ்வாறு சாதனை உயரத்தை எட்டி உள்ள மகளிர் சமயத்திற்கு இன்று ஒருநாள் உலகமெங்கும் ஒருங்கே கொண்டாடப்படுகிறது என்றால் அது தான் உலக மகளிர் தினம். 1857ஆம் ஆண்டு நீலகிரி சுரங்கங்கள், தொழிற்சாலைகள், நிறுவனங்களில் பணி வாய்ப்பு தரப்பட்டது பெண்களால் தொழிற்சாலைகளிலும் வேலை செய்ய முடியும் என்பது உலகுக்கு உணர்த்தப்பட்டது. ஆண்களுக்கு நிகராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததே தவிர, ஊதியத்தில் பெண்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது.

இதனால் பெண்கள் மிக வருத்தம் அடைந்தனர். ஆண்களுக்கு இணையான ஊதியம் உரிமைகள் வழங்கக்கோரி குரல் எழுப்பினர். அப்போதைய அமெரிக்க அரசு இதற்கு செவி கொடுக்கவில்லை. இதனால் அமெரிக்கா முழுவதும் பெண் தொழிலாளர்கள், 1857ஆம் ஆண்டு மார்ச் 8ஆம் தேதி இதற்கான போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தை அரசின் ஆதரவுடன் தொழிற்சாலைகளின் உரிமையாளர்கள் ஒடுக்கினர். அதன் பிறகு 1907 ஆம் ஆண்டு சம ஊதியம் சம உரிமை கேட்டு பெண்கள் போராடத் தொடங்கினர். 1910-ஆம் ஆண்டு டென்மார்க் நாட்டில் பெண்கள் உரிமை மாநாடு நடந்தது.

இதில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பெண்களின் அமைப்புகள் கலந்துக் கொண்டு தங்களது ஒற்றுமையை உலகிற்கு அவர்கள் காட்டினர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட ஜெர்மனி கம்யூனிஸ்ட் தலைவர் கிளாரே செர்கினே, மார்ச் 8ஆம் தேதியை மகளிர் தினமாக கொண்டாட வேண்டும் என்று தீர்மானத்தை நிறைவேற்ற வலியுறுத்தினார். பல்வேறு தடங்கல்களால் இந்த தீர்மானம் நிறைவேறவில்லை.

1920 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யாவில் செயின்ட் பீட்டர்ஸ் நகரில் நடந்த பெண்களின் போராட்டத்தில் கலந்து கொண்ட ரஷ்யாவின் அலெக்ஸ்சாண்டிரா கெலன்ரா, ஆண்டுதோறும் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினத்தை கொண்டாட வேண்டும் என்று பிரகடனம் செய்தார். இதையடுத்து 1921ம் ஆண்டு முதல் மார்ச் 8ஆம் தேதி உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பாதி 975 ஆம் ஆண்டு முதல் தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் ஆகிய நாடுகளில் சர்வதேச மகளிர் தினத்துக்கு விடுமுறை வழங்கப்படுகிறது.

1907ல் தொடக்கம், 1909ல் அமெரிக்காவில் நடைபெற்ற முதல் தேசிய மகளிர் தினம், 1910ல் இரண்டாவது தேசிய பெண்கள் மாநாடு, 1911ல் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் நடைபெற்ற தேசிய மகளிர் தினம், 1914 – 1916ல் ரஷ்யா பெண்களுக்கான போராட்டம், 1917ல் ரஷ்யாவில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்ட மகளிர் தினம், 1945ல் தனி பெண்ணுக்கான உரிமை, உலக பெண்களுக்கான உரிமையாக மாற்றப்பட்ட வருடம்.‌ 1975 – 1977ல் சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது. 2014ல் 100க்கு மேற்பட்ட நாடுகளில் தேசிய மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்