ஆர்டர் செய்த உணவுக்கு பணம் கொடுக்க மனமில்லாமல் ஊழியர் மீது அவதூறாக பழி சுமத்திய பெண்….

0
Follow on Google News

பெங்களூருவில் பெண் ஒருவர் ஸொமேட்டோ ஊழியரால் தாக்கப்பட்டதாக வீடியோ வெளியிட்ட விவகாரத்தில் காவல்துறை கைது செய்து தீவிர விசாரணைக்கு பிறகு உண்மை வெளிவந்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மற்றும் சோசியல் இன்ஃப்ளூயன்ஸரான ஹிதேஷா சந்திரனி ஸொமேட்டாவில் உணவு ஆர்டர் செய்துள்ளார்.

அந்த ஆர்டரை டெலிவரி செய்ய வந்த ஸொமேட்டோ ஊழியர் தன்னை மூக்கில் தாக்கியதில் என்னுடைய மூக்குடைந்து ரத்தம் வந்தது, என்றும் கடந்த வாரம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி பரபரப்பை கிளப்பியது. இந்த வீடியோவை பார்த்த அனைவரும் அந்த பெண்ணிற்கு ஆதரவாக பேசி வந்தனர்.

இந்த வீடியோ விவகாரம் ஸொமேடடோ நிறுவனத்தின் காதுக்கு செல்ல அந்த பெண்ணிற்கு டெலிவரி செய்த அந்த ஊழியரை வேலை விட்டு நீக்கி விட்டனர். இந்த வீடியோ விவகாரம் பெரிதாக காவல்துறை அந்த ஊழியரை கைது செய்தது. தீவிர விசாரணைக்கு பிறகு உண்மை வெளிவந்தது. அந்த ஊழியர் ஆர்டர் செய்த டெலிவரியை சற்று தாமதமாக கொண்டு வந்த காரணத்தினால் இந்த பெண் பணம் தராமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

அந்த ஊழியரை அவதூறாகப் பேசியும் தனது காலனிகளை கொண்டு தாக்கியுள்ளார். அந்த மூக்கில் ஏற்பட்ட ரத்தக் காயமும் இவரால் ஏற்பட்டது இல்லையாம் அந்தப் பெண்ணின் மோதிரத்தால ஏற்பட்ட காயம் என்று காவல்துறையிடம் கூறியுள்ளார். தற்போது ஊழியர் மீது தவறில்லை என்று தெரியவர, அந்த பெண்ணை சமூக வலைத்தளங்களில் திட்டித் தீர்த்து வருகிறார்கள்.