உன்ன பார்த்தா இந்திய குடிமகன் மாதிரியே தெரியலையே…? நோட்டாவுக்கு ஓட்டு போட காசு கேட்ட யோகிபாபு…

0

நடிகர் யோகிபாபு, ஷீலா ராஜ்குமார் நடிப்பில், இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் திரைப்படம் தான் மண்டேலா. இந்தத் திரைப்படத்தை தயாரிப்பாளர் சசிகாந்த் தயாரிப்பில் பரத் சங்கர் இசையில் ஏப்ரல் 4ஆம் தேதி ஸ்டார் விஜய் இல் வெளிவர இருக்கிறது. இந்த திரைப்படம் கதையை வாங்க பாக்கலாம்… சூரங்குடி என்ற கிராமத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது.

இந்த ஊராட்சி தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் இரண்டு பேரும் சுகமான 350 – 350 என்ற வாக்கை பெறுகிறார்கள். இரண்டு பக்கத்திலும் யாருக்காவது ஒரு வாக்கு கூடினால் தான் வெற்றியை அறிவிக்க முடியும். அப்போதுதான் முடிவெட்டும் யோகி பாபு உள்ளே வருகிறார். யோகி பாபுவின் ஓட்டை இரண்டு வேட்பாளர்களும் கவர்வதற்காக போட்டி போட்டு அவருக்கு சலுகைகளை வழங்கு வருகிறார்கள்.

நகைச்சுவையான அரசியலை நோக்கி திரைப்படம் பயணிப்பதாக தெரிகிறது. ஃபர்ஸ்ட் லுக், டீசர் என வெளியாகி தேர்தல் நேரத்தில் அசத்தினார். தற்போது வெளியாகியுள்ள ட்ரெய்லரில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது யோகி பாபு ஒரு தமிழ் சினிமாவின் நல்ல நகைச்சுவை நடிகர். கூர்க்கா திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அனைவரையும் சிரிக்க வைக்கக்கூடிய நகைச்சுவையான முகம். தற்போது இவர் நடிப்பில் மண்டேலா திரைப்படத்தில் கிராமத்தைச் சேர்ந்த நபராகவே மாறிவிட்டார். நகைச்சுவைகளை அள்ளித் தொடுத்துள்ளார்.

நடிகை ஷீலா ராஜ்குமார் ‘அழகிய தமிழ் மகள்’ சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மனதில் இடத்தைப் பிடித்தவர். தமிழ், மலையாளம் மொழிகளில் நடித்துள்ளார். இவர் டூ லெட், திரௌபதி திரைப்படத்தின் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளார். தற்போது இவர் நடிப்பில் மண்டேலா திரைப்படம் வெளியாக இருக்கிறது. தயாரிப்பாளர் சசிகாந்த் சமுத்திரக்கனி நடித்த ஏலே திரைப்படத்தை வெளியிட திரையரங்கு உரிமையாளர்களுக்கு இடையில் நடந்த பிரச்சினையில் ஏலே திரைப்படத்தை விஜய் டிவியில் வெளியானது. அதே பணியில் தான் இந்த திரைப்படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரசிகர்கள் மத்தியில் காத்திருப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here