நெகடிவ் ரிப்போர்டை கேட்டு சோகத்தில் ஸ்டாலின்.! வேறு வழியின்றி உங்களுக்கு தான் வெற்றி என சமாதான செய்த பிரசாந்த் கிஷோர்.!

0
Follow on Google News

நேற்று நடந்து முடிந்த வாக்கு பதிவுக்கு பின் தொடர்ந்து திமுக தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து திமுக தலைவர் பேசிய தகவல் வெளியாகி உள்ளது, வாக்கு பதிவு இறுதி கட்டத்தை நெருங்கிய கொண்டிருந்த போது பிரசாந்த் கிஷோரை சந்தித்துள்ளார் முக ஸ்டாலின் இதன் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த சந்திப்பின் போது உதயநிதி உடன் இருந்துள்ளார்.

இந்நிலையில் வாக்கு பதிவு முடியும் தருவாயில் தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக எத்தனை சதவிகிதம் வாக்குகள் பதிவாகி உள்ளது என செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கையில் பிரசாந்த் கிஷோர் – முக ஸ்டாலின் சந்திப்பு நடைபெற்றுள்ளது. இந்நிலையில் கள நிலவரம் குறித்து ஸ்டாலின் கேட்க பல தொகுதியில் கடும் இழுபறியாக இருக்கலாம் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார் இதற்கான காரணத்தையும் ஸ்டாலின் கேட்க.

தேர்தல் அறிவிப்பு வெளியானதும் நன்றாக தான் சென்று கொண்டிருந்தது, ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயார் குறித்து ஆ ராசா சச்சைக்குரிய வகையில் பேசியது,திண்டுக்கல் லியோனின் பெண்கள் குறித்த பேச்சு போன்றவை பெண்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு அலையை திமுகவுக்கு எதிராக ஏற்படுத்தியுள்ளது, இதற்கு முக்கிய காரணம் அதிமுக, பாஜக ஐடி பிரிவு, மேலும் பாமக தொண்டர்களும் சமூக வலைதளத்தில் விறுவிறுப்புடன் செயல்படுகின்றனர்.

மேலும் இந்த சர்ச்சையுடன் இதற்கு முன் உதயநிதி பேசிய சசிகலா குறித்த சர்ச்சை பேச்சு, கே.என் நேரு கட்சி நிர்வாகிகளை மிரட்டும் வீடியோ என அனைத்தையும் அதிமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகளை சேர்ந்த ஐடி பிரிவு திமுகவுக்கு எதிராக கையாண்ட விதம், அதிமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் பிரச்சாரம் திமுகவின் இன்றைய இழுபறிக்கு காரணம்.அனால் திமுக ஐடி பிரிவு பற்றி நான் சொல்ல ஒன்றுமில்லை, எங்கள் ஐ-பேக் நிறுவனம் ஊழியர்கள் துணை இல்லை என்றால் திமுகவின் சமூக வலைதள செயல்பாடுகள் மிக மோசமாக இருந்திருக்கும் என பிரசாந்த் கிஷோர் விளக்கம் கொடுத்ததாக கூறபடுகிறது.

இப்படி தொடர்ந்து களம் நிலவரம் குறித்து பிரசாந்த் கிஷோர் தொடர்ந்து பேச முக ஸ்டாலின் சோகத்தில் முழ்கியுள்ளார், தொடர்ந்து ஸ்டாலின் திமுக தரப்பில் உள்ள செயல்பாடுகள், அதிமுக- பாஜக எதிர்ப்பு அலைகள் பற்றி மக்கள் மனநிலை பற்றி பேசி திமுக தான் ஆட்சி அமைக்க வாய்ப்புகள் இருப்பதாக தெரிவிக்க, உடனே முக ஸ்டாலினை சமாதனம் செய்யும் விதத்தில் தற்போது இழுபறியில் உள்ள தொகுதிகள் பெரும்பாலும் திமுக தான் வெற்றி பெரும், ஒரு குறிப்பிட்ட தொகுதி எண்ணிக்கையை குறிப்பிட்டு மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என பிரசாந்த் கிஷோர் தெரிவித்த பின்பு தான் ஸ்டாலின் நிம்மதி அடைந்ததாக கூறப்படுகிறது.