அமெரிக்க ஸ்டைலில் விளம்பரம் வெளியிட்டு எதிர்கொள்ள முடியமால் நீக்கிவிட்டு ஓடிய அமெரிக்க புகழ் PTR தியாகராஜன்.!

0
Follow on Google News

திமுக ஐடி பிரிவு செயலாளர் PTR தியாகராஜன் தனது டிவீட்டர் பக்கத்தில் தேர்தல் பிரச்சார வீடியோ ஒன்றை பதிவு செய்திருந்தார், அந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் கடும் எதிர்ப்புக்கு ஆளானது, அடிக்கடி தன்னுடைய அமெரிக்க வாழ்கை பற்றி பெருமை பேசி வரும் PTR பழனிவேல் தியாகராஜன், அமெரிக்க ஸ்டைலில் விளம்பரம் விடியோவை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்து , பொய் சொன்னாலும் ஒரு நியாயம் வேண்டாமா என வடிவேலு நகைசுவை கட்சியில் வருவது போன்று கேலி கிண்டலுக்கு ஆளானார்.

PTR தியாகராஜன், “விலை உயர்வால் சாமானிய மக்கள் மட்டுமல்ல, அனைத்து தரப்பு மக்களும் அவதி” என்று ஒரு ட்வீட்டுடன் வீடியோ பதிவு செய்தார் , அந்த வீடியோவில், “ஸ்விட்சர்லாந்திலிருந்து என் கணவர் எனக்கு ரூபி தோடுகள் வாங்கி வந்தார்” என்று சொல்லும் மேல்தட்டு பெண்ணிடம் கணவன், “ஒரு டீ தருகிறாயா” என்று கேட்க, அந்தப் பெண் விறகு அடுப்பில் – புகைக்கு மத்தியில் – டீ போடுகிறாள்.

ஸ்விட்சர்லாந்திலிருந்து வந்த கணவனோ, “கேஸ் சிலிண்டர் 850 ரூபாய். நம்மால் அதை வாங்க முடியாது” என்று உணர்ச்சி பொங்க கூற, பின்னால் சோகமான மியூஸிக்! அதோடு, “அனைத்து தரப்பு மக்களையும் வாட்டி வதைக்கிறது விலைவாசி. அதற்கு காரணமானவர்களை நீக்குவோம்” என திமுக விளம்பர குரலுடன் முடியும் இந்த வீடியோவை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்திருந்தார் திமுக ஐடி பிரிவு செயலாளர் PTR தியாகராஜன்.

இதற்கு வலைதளவாசிகள், மாளிகையில் இருப்பவனுக்கு 850 ரூபாய் கொடுத்து சிலிண்டர் வாங்க முடியலைன்னு சொல்றதெல்லாம் ஸ்டாலினுக்கு கார் இல்லைன்னு சொல்றதை விட கேவலமா இல்லையா உங்களுக்கு? என்று இது போன்று PTR தியாகராஜனை கிண்டல் செய்ய, உடனே தனக்கு எதிராக வரும் கருத்துக்களை எதிர்கொள்ள முடியமால் தனது டிவீட்டரில் பதிவு செய்திருந்த அந்த விளம்பர வீடியோ பதிவை நீக்கிவிட்டார் PTR தியாகராஜன்.

ஆனால் இந்த வீடியோவை டவுன்லோட் செய்து சமூக வலைத்தளத்தில் வைரல் செய்து வருகின்றனர் அதிமுக மற்றும் அதன் கூட்டணி காட்சிகள், சிலிண்டருக்கு தங்க நகை கொடுப்பது, 1 லிட்டர் பெட்ரோலுக்கு பதில் பைக்கை கொடுப்பது போன்ற விளம்பரங்களில் வரிசையில் இதுவும் ஓன்று என்றும், ஆப்பிள் வாட்ச், ரூபி நெக்லச், வீட்டுக்குள்ளாற ஷூ சமயலறையில்செருப்பு, மேடையிருந்தும் தரையில் அடுப்பு, விமானத்தில் பல ஊர் சுற்றும் பிரமுகர் என்று பல தவறுகளை உள்ளடக்கிய விளம்பரம் இது என இந்த வீடியோவை பார்க்கும் மக்கள் கருத்து தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.