இன்றைய ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம் : புதிய நபர்களால் தொழில் வாய்ப்புகள் உண்டாகும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சுபச்செய்திகள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறைந்து சுமூகமான சூழல் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
அஸ்வினி : வாய்ப்புகள் உண்டாகும்.
பரணி : கலகலப்பான நாள்.
கிருத்திகை : கருத்து வேறுபாடுகள் குறையும்.

ரிஷபம் : உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். வேலை தொடர்பான முக்கிய முடிவுகளில் கவனம் வேண்டும். எதிர்பாராத செயல்களின் மூலம் அலைச்சல்கள் மேம்படும். பங்காளி வகை உறவினர்களிடம் அனுசரித்து செல்லவும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : கவனம் வேண்டும்.
மிருகசீரிஷம் : அலைச்சல்கள் மேம்படும்.

மிதுனம் : தொழில் மேன்மைக்கான உதவிகள் மற்றும் ஆதரவு கிடைக்கும். பயணங்களை மேற்கொள்வதற்கான சூழ்நிலைகள் உண்டாகும். மனதில் இருந்துவந்த ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கான சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் புதுவிதமான அனுபவம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
மிருகசீரிஷம் : ஆதரவு கிடைக்கும்.
திருவாதிரை : ஆசைகள் நிறைவேறும்.
புனர்பூசம் : அனுபவம் உண்டாகும்.

கடகம் : அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த பணிகள் நிறைவடையும். புதிய பயணங்களை மேற்கொள்வீர்கள். சோர்வு நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்துவந்த சில செயல்களை செய்து முடிப்பீர்கள். மனை தொடர்பாக எதிர்பார்த்த கடன் உதவிகள் சாதகமாக அமையும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
புனர்பூசம் : பயணங்களை மேற்கொள்வீர்கள்.
பூசம் : காரியசித்தி உண்டாகும்.
ஆயில்யம் : உதவிகள் கிடைக்கும்.

சிம்மம் : திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். செய்யும் பணியில் பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். புதிய மனை வாங்குவதற்கான சூழல் அமையும். வெளிவட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். இளைய சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மகம் : வாய்ப்புகள் உண்டாகும்.
பூரம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திரம் : செல்வாக்கு அதிகரிக்கும்.

கன்னி : குடும்ப பெரியோர்களிடம் அனுசரித்து செல்லவும். பொருளாதாரம் தொடர்பான செயல்பாடுகளில் கவனம் வேண்டும். வெளியூர் தொடர்பான வியாபாரத்தில் நிதானமாக செயல்படவும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும்போது கவனம் வேண்டும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்
உத்திரம் : அனுசரித்து செல்லவும்.
அஸ்தம் : நிதானமாக செயல்படவும்.
சித்திரை : கவனம் வேண்டும்.

துலாம் : பயணங்கள் தொடர்பான எண்ணங்கள் ஈடேறும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவேறும். மனதில் இருந்துவந்த நீண்ட நாள் விருப்பங்களை நிறைவேற்றி கொள்வீர்கள். இணைய வர்த்தகம் தொடர்பான பணிகளில் மேன்மை அடைவீர்கள். அந்நியர்களின் நட்புகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்
சித்திரை : எண்ணங்கள் ஈடேறும்.
சுவாதி : விருப்பங்கள் நிறைவேறும்.
விசாகம் : நட்புகள் கிடைக்கும்.

விருச்சகம் : நண்பர்களின் மூலம் சுபச்செய்திகள் கிடைக்கும். வாகனப் பழுதுகளை சரி செய்வீர்கள். நெருங்கிய நண்பர்களிடம் பேசும்போது கவனம் வேண்டும். வாழ்க்கை பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். பிள்ளைகளின் மூலம் மனமகிழ்ச்சி தரும் நிகழ்வுகள் நடைபெறும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
விசாகம் : சுபச்செய்திகள் கிடைக்கும்.
அனுஷம் : கவனம் வேண்டும்.
கேட்டை : மனமகிழ்ச்சியான நாள்.

தனுசு : உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. உடல்நலம் சீராகும். நீண்ட நாட்களாக மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். கேளிக்கைகளில் ஈடுபட்டு மனமகிழ்ச்சி அடைவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
மூலம் : அனுசரித்து செல்லவும்.
பூராடம் : புத்துணர்ச்சியான நாள்.
உத்திராடம் : முன்னேற்றம் உண்டாகும்.

மகரம் : விவசாயம் தொடர்பான புதுவிதமான ஆலோசனைகளும், ஆதரவுகளும் கிடைக்கும். உடைமைகளில் கவனம் வேண்டும். பண விஷயங்களில் சாதுர்யமாக பேசி சமாளிப்பீர்கள். கோபம் கொண்ட பேச்சுக்களை தவிர்க்கவும். மனதில் புதுவிதமான எண்ணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
உத்திராடம் : ஆதரவு கிடைக்கும்.
திருவோணம் : கவனம் வேண்டும்.
அவிட்டம் : மகிழ்ச்சியான நாள்.

கும்பம் : தன்னம்பிக்கையுடன் புதிய முயற்சிகளில் ஈடுபடுவீர்கள். குடும்பத்தில் உள்ள பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். பதவி உயர்விற்கான சூழல் அமையும். திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். புத்திரர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். அரசு தொடர்பான செயல்பாடுகளில் இருந்துவந்த தடைகள் அகலும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : தன்னம்பிக்கை உண்டாகும்.
சதயம் : அங்கீகாரம் கிடைக்கும்.
பூரட்டாதி : தடைகள் அகலும்.

மீனம் : நவீன பொருட்களை வாங்குவதற்கான எண்ணங்கள் நிறைவேறும். உறவினர்கள் சாதகமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். உடல்நிலையில் சற்று சோர்வும், சுறுசுறுப்பின்மையும் ஏற்படும். வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் சற்று பொறுமையுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்
பூரட்டாதி : எண்ணங்கள் நிறைவேறும்.
உத்திரட்டாதி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
ரேவதி : பொறுமை வேண்டும்