குக் வித் கோமாளி புகழை காண வந்த கூட்டத்தால். கடை திறப்பு விழா மூடும் விழா ஆனது…

0
Follow on Google News

நெல்லையில் செல்போன் கடையை திறந்து வைக்க திறப்பு விழாவிற்கு வருகை தந்த குக்வித் கோமாளி புகழ். ஏராளமான ரசிகர்கள் கூட்டத்தில் திறப்பு விழா கடையை மூடும் விழாவாக அமைந்துவிட்டது. விஜய் டிவியில் வெளியாகும் புதிய புதிய நிகழ்ச்சி ஒவ்வொன்றும் டிஆர்பி எகிரி கொண்டே இருக்கும். அப்படி தான் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமடைந்து வருகிறது.

மக்கள் மனம் கவர்ந்த ஒரு நிகழ்ச்சியாக கொக்கு வித் கோமாளி உள்ளது. விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே தற்போது நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நகைச்சுவையில் பெரிதாக மக்களை கவர்ந்த தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கியவர் தான் புகழ். விஜய் டிவி பலரை வளர்த்துவிட்டு உள்ளது விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் வந்தாலே போதும் கடைத் திறப்பு விழா முதல் பொது நிகழ்ச்சி வரை அனைத்துக்கும் விருந்தினராக அழைத்து பட்டையை கிளப்பி விடுகின்றனர்.

அப்படித்தான் சில மாதங்கள் முன்பு இடுப்புக்கு பெயர்போன பிக் பாஸ் ரம்யா பாண்டியனும் பாலாவும் இணைந்து ஒரு திறப்பு விழாவை கலந்து கொண்டனர் இந்த புகைப்படம் வைரலானது. அந்த வரிசையில் தான் தற்போது ரசிகர்களால் கொடிகட்டி பறக்க தொடங்கியுள்ளார். எந்த மனநிலையிலும் இருந்தாலும் இந்த புகழ் செய்யும் அட்டூழிய நிகழ்ச்சியை பார்க்கும் போது யாராக இருந்தாலும் சிரித்து விடுவார்கள்.

நெல்லையில் புதிதாக செல்போன் கடை திறப்பு விழா ஒன்றை திறக்க விஜய் டிவியின் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி புகழ் வந்துள்ளார். அவரை காண ஏராளமான மக்கள் கூட்டம் அலைமோதியது. ரசிகர்கள் செல்பி எடுத்துக்கொள்ள முந்தி அடிக்க கூட்டம் அலை மோத போலீஸாரால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் தடியடி நடத்தி கலைத்தனர்.

தமிழகத்தின் கொரோனா 2வது அலை அதிகரித்து வரும் இந்த வேளையில் கடை முன்பு கூட்டத்தை ஏற்படுத்திய கடை உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் போட்டுள்ளனர். கடையையும் மூடி சீல் வைத்து விட்டனர். திறப்பு விழா நடத்த வந்தப் புகழை காண வந்த கூட்டத்தால் கடையை மூடு விழா சிறப்பாக நடைபெற்றது.