இன்றைய ராசி பலன்கள்

0
Follow on Google News

மேஷம் : உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளுடன் இருந்துவந்த பிரச்சனைகள் குறையும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். நண்பர்களின் உதவிகளால் பொருளாதார ரீதியாக இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். பங்குதாரர்களால் அனுகூலம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : அடர் நீலம்
அஸ்வினி : பிரச்சனைகள் குறையும்.
பரணி : பொருளாதாரம் மேம்படும்.
கிருத்திகை : அனுகூலம் உண்டாகும்.

ரிஷபம் :உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பாராத சில மாற்றங்கள் உண்டாகும். விரும்பிய பொருட்களை வாங்கி மனம் மகிழ்வீர்கள். வாழ்க்கையில் முன்னேற்றமான சிந்தனைகள் அதிகரிக்கும். வாழ்க்கை பற்றிய புதுவிதமான கண்ணோட்டம் உண்டாகும். பிரிந்து சென்ற நண்பர்களின் சந்திப்பு மனமகிழ்ச்சியை அளிக்கும்.
அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
கிருத்திகை : மாற்றங்கள் உண்டாகும்.
ரோகிணி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
மிருகசீரிஷம் : புதுமையான நாள்.

மிதுனம் :திட்டமிட்ட சில காரியங்கள் காலதாமதமாக நடைபெறும். அவசரமின்றி பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்களின் அறிமுகம் கிடைக்கும். ஆடம்பர செலவுகளை குறைத்து சேமிப்புகளை தொடங்குவீர்கள். சபை உறுப்பினர்களிடம் மதிப்புகள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : பிரவுன் நிறம்
மிருகசீரிஷம் : பொறுமை வேண்டும்.
திருவாதிரை : அறிமுகம் கிடைக்கும்.
புனர்பூசம் : மதிப்புகள் அதிகரிக்கும்.

கடகம் :வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். செய்யும் முயற்சிகள் ஈடேறும். தவறிய சில வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சனைகள் உண்டாகும். குடும்பத்தில் உங்களின் கருத்துக்களுக்கு ஆதரவு கிடைக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்
புனர்பூசம் : லாபம் கிடைக்கும்.
பூசம் : முயற்சிகள் ஈடேறும்.
ஆயில்யம் : ஆதரவு கிடைக்கும்.

சிம்மம் : மக்கள் தொடர்பு பணிகளில் இருப்பவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். அரசாங்கத்தின் மூலம் அனுகூலம் ஏற்படும். வியாபாரத்தில் அவசர முடிவுகளை தவிர்க்கவும். நண்பர்களின் மூலம் உதவிகள் கிடைக்கும். பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் ஆதாயம் உண்டாகும். எண்ணிய காரியங்களில் செயல்திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மகம் : அனுகூலமான நாள்.
பூரம் : உதவிகள் கிடைக்கும்.
உத்திரம் : செயல்திறன் அதிகரிக்கும்.

கன்னி : மனதில் தோன்றும் விசித்திரமான செயல்களை செய்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும். வியாபாரத்தில் பழைய சரக்குகளை அலைச்சல்களுக்கு பின்பு விற்பீர்கள். மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். இழுபறியான சில பணிகளை செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்
உத்திரம் : வாய்ப்புகள் உண்டாகும்.
அஸ்தம் : பொறுப்புகளை ஏற்பீர்கள்.
சித்திரை : இழுபறிகள் அகலும்.

துலாம் : உங்களிடம் பழகும் நண்பர்கள் மற்றும் உறவினர்களின் பலம், பலவீனத்தை உணர்வீர்கள். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்லவும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் சொந்த விஷயங்களில் தலையிட வேண்டாம். புதிய விஷயங்களுக்காக அலைச்சல்கள் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
சித்திரை : புரிதல் ஏற்படும்.
சுவாதி : அனுசரித்து செல்லவும்.
விசாகம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

விருச்சகம் : வியாபார ரீதியாக சில பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கும். உத்தியோகத்தில் புதிய அதிகாரிகளிடம் உங்களின் மீதான மதிப்புகள் அதிகரிக்கும். உறவினர்களால் ஆதாயம் உண்டாகும். வியாபாரத்தில் பங்குதாரர்களினால் ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்
விசாகம் : அறிமுகம் கிடைக்கும்.
அனுஷம் : ஆதாயம் உண்டாகும்.
கேட்டை : அன்பு அதிகரிக்கும்.

தனுசு : நெருக்கமானவர்களுக்காக சில செலவுகளை செய்து மனம் மகிழ்வீர்கள். வழக்கு தொடர்பான பிரச்சனைகள் சாதகமாக முடியும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்வீர்கள். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு
மூலம் : மனம் மகிழ்வீர்கள்.
பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
உத்திராடம் : விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

மகரம் : எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் மேம்படும். உடன்பிறந்தவர்கள் புதிய முயற்சிகளுக்கு உதவியாக இருப்பார்கள். குடும்பத்தில் பிள்ளைகளால் பெருமை உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் குறையும். இழுபறியான சுபகாரிய பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திராடம் : சிந்தனைகள் மேம்படும்.
திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
அவிட்டம் : மனவருத்தங்கள் குறையும்.

கும்பம் : பெரிய மனிதர்களின் ஆதரவு மனதிற்கு புது நம்பிக்கையை கொடுக்கும். உறவினர்களுக்கிடையே மரியாதைகள் அதிகரிக்கும். திறமைக்கேற்ப பாராட்டுகள் கிடைக்கும். எடுத்த காரியங்களை செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
அவிட்டம் : நம்பிக்கை மேம்படும்.
சதயம் : பாராட்டுகள் கிடைக்கும்.
பூரட்டாதி : பாதிப்புகள் ஏற்படும்.

மீனம் : உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் விழிப்புணர்வு வேண்டும். கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். எந்த செயலையும் மன உறுதியோடு செய்து முடிப்பீர்கள். நண்பர்களின் எதிர்பாராத சந்திப்பு உண்டாகும்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்
பூரட்டாதி : விழிப்புணர்வு வேண்டும்.
உத்திரட்டாதி : ஒத்துழைப்பு கிடைக்கும்.
ரேவதி : வாக்குவாதங்களை தவிர்க்கவும்.