சிலை உடைக்கும் திருட்டு கூட்டம் போடும் வேஷம்- பார்ப்பனதுவேஷம்.! PTR தியாகராஜனுக்கு நடிகை கஸ்துரி பதிலடி.!

0

கோவில்களை கபளீகரம் செய்ய துடிக்கும் நூல் கூட்டம் என்ற தலைப்பில் ஒரு புகைப்படத்தை தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவு செய்த திமுக ஐடி பிரிவு செயலாளர் PTR தியாகராஜன், கோவில்களை யார் நிர்வகிப்பது என்பது பிரச்சனையா அல்லது பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் உள்ள கோவில்களை யார் நிர்வகிப்பது என்பதில் பிரச்சினையா? பல்லாயிரம் ஆண்டுகளாக வர்ணாசிரம கோட்பாட்டில் ஒட்டிக்கொண்டு ஊரை கெடுக்கும் “நிபுணர்களை” கொண்டு நம் கோவில்களை நிர்வகிக்க இந்த விஷமிகள் யார்? என மறைமுகமாக ஒரு குறிப்பிட்ட நபர்களை கடுமையாக தாக்கியிருந்தார்,

இதற்கு நடிகை கஸ்துரி பதிலடி கொடுக்கும் விதத்தில், சிலை உடைக்கும் திருட்டு கூட்டம் உண்மையை மறைக்க எப்போதும் போடும் வேஷம்- பார்ப்பனதுவேஷம். அரசிடமிருந்து விடுவிக்கப்பட்டால் ஒவ்வொரு கோயிலின் வருமானமும் சொத்தும் இந்துவிரோதி கொள்ளைக்காரர்களிடம் இருந்து பாதுகாக்கப்படும் என்பதுதான் இவர்களின் அலறலுக்கு காரணம், மேலும் நான் ஜக்கி க்ரூப் இல்லை. அவர் செய்வதெல்லாம் சொல்வதெல்லாம் ஏற்பவளில்லை.

கோவில்களை அரசு அட்டூழியத்திடமிருந்து பாதுகாக்க, அந்த நோக்கத்துடன் யார் முன்வந்தாலும் அவர்களுக்கு என் ஆதரவு உண்டு என நடிகை கஸ்துரி தெரிவித்திருந்தார், இதற்கு வலைதளவாசி ஒருவர், எவன் கோவில் கருவறைக்குள் உருட்டிக்கிட்டு இருக்கறான்…..? மணி ஆட்டற அவனுக்கு தெரியாம எப்டி சிலை திருடு போகும்…..? என கஸ்துரியிடம் கேள்வி கேட்க அதற்கு பதில் கொடுத்துள்ள கஸ்துரி, கோவில் மூடிய வேளையில் கூட குருக்கள் என்ன சிலைகளை கட்டிக்கொண்டே வா தூங்க செல்வார்?

பாவம் அவரு குருக்களா கூர்காவா ? கோவிலை காக்க வேண்டிய பொறுப்பு யாரிடம் உள்ளது? அவர்களை கேளுங்கள் இந்த கேள்வியை. வேலியே பயிரை மேய்ந்துவிட்டு பழியை அப்பாவி மீது போட வேண்டியது. அரசாங்க பலம் பொருந்திய அதிகாரபூர்வ கொள்ளைக்காரர்கள் யார் என்று ஊருக்கே தெரியும். உங்களுக்கும் தெரியும் . கோவிலுக்குள் CCTV வைக்கலாமே? அது சரி, புழல் சிறையிலேயே கேமரா வேலை செய்வதில்லையாம்… அதுக்கும் ஐயர் தான் காரணமா? என தெரிவித்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here