கொரோனா உச்சக்கட்டம்.. தள்ளி போகும் வாக்கு எண்ணிக்கை.! தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி அமல்படுத்த படுகிறதா.?

0
Follow on Google News

கடந்த 2020 தொடக்கத்தில் சீனாவில் தொடங்கிய கொரோன தொற்று உலகம் முழுவதும் பரவியது, இது இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை, இதனை தொடர்ந்து கொரோன பரவலை கட்டுக்குள் கொண்டு வர இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, பேருந்துகள், ரயில், விமானம் என அனைத்து பொது சேவைகள் நிறுத்தப்பட்டது, இது மக்களுக்கு புதிய அனுபவமாக இருந்தாலும் பெரும் சிரமத்துக்கு ஆளானார்கள்.

இதனை தொடர்ந்து கொரோன தொற்றின் காரணமாக 2021 சட்டசபை தேர்தல் நடக்குமா.? என்கிற சந்தேகம் வலுத்து அது பெரும் விவாத பொருளாக கூட மாறியது, இதனால் தேர்தல் தேதி கொரோனா தொற்று கட்டுக்குள் வரும் வரை தள்ளி வைக்கப்படலாம், அதுவரை ஆளுநர் ஆட்சி அமல்படுத்த படலாம் என பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. மேலும் கொரோனா தொற்றின் காரணமாக அரசியல் முக்கிய தலைவர்கள், மற்றும் முக்கிய பிரபலங்கள் என பலர் உயிர் இழந்தனர்.

இந்நிலையில் கொரோன தொற்று கட்டுக்குள் கொண்டு வந்து படி படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டத்தை தொடர்ந்து 2021 சட்டசபை தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம், இதனை தொடர்ந்து மார்ச் மாதம் தொடங்கிய தேர்தல் திருவிழா ஏப்ரல் மாதம் 6ம் வாக்கு பதிவுடன் முடிந்தது, ஆனால் கொரோன தொற்றின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களுக்கு கொரோன தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோன தொற்றின் இரண்டாம் அலை முதல் அலையை விடவேகமாக பரவி வருவதாக மருத்துவர்கள் எச்சரித்து வரும் நிலையில், கொரோன பரவல் அதிகம் உள்ள இடங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு வருகிறது. மேலும் சில மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் நாளுக்கு நாள் கொரோன தொற்று அதிகரித்து வரும் நிலையில் கட்டுப்பாடுகள் இன்னும் கடினமாக இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது.

இந்நிலையில் கொரோன தொற்றின் இரண்டாம் அலை மேலும் அதிகரித்து வருவதால், கொரோன தொற்று கட்டுக்குள் வரவில்லை என்றால் மே மாதம் நடைபெற இருக்கும் தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்படலாம் என்றும், கொரோன தொற்று கட்டுக்குள் வந்ததும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது, அதுவரை ஆளுநர் ஆட்சி தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.