மதுரையில் சித்திரை திருவிழா நடத்த கோரி நாளை ஆர்ப்பாட்டம்… சமூக வலைத்தளங்களில் அழைப்பிதழ்…

0
Follow on Google News

மதுரையில் இந்த ஆண்டும் சித்திரை திருவிழா ரத்து. கடந்த வாரம் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்கு அனுமதி கொடுத்த அரசு திருவிழாவுக்கு கொடுக்காதது ஏன் என்று பக்தர்கள் மத்திய மாநில அரசை கண்டித்து நாளை ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்ற திருவிழா என்றால் மதுரையில் நடைபெறும் சித்திரைத் திருவிழா தான். மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் ஆற்றில் இறங்குவது என்று லட்சம் லட்சமாக மக்கள் கூட்டம் இந்த சித்திரை திருவிழாவை காண வரும்.

கடந்த ஆண்டு சீனா மூலம் கொரோனா வைரஸ் பரவியது. கொரோனா உலகம் முழுவதும் விரைவாக பரவியது இந்த வைரஸ். இந்தியா சில கட்டுப்பாடுகள் முன்கூட்டியே எடுத்ததால் வைரஸ் பரவலை குறைக்க முடிந்தது. மத்திய அரசு பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமுலுக்குக் கொண்டுவந்தது. இதனால் மத நிகழ்வு மற்றும் கோவில் திருவிழா என அனைத்தும் ரத்து செய்யப்பட்டதால் கடந்த ஆண்டு உலக அளவில் பிரபலமான மதுரை நடைபெறும் சித்திரைத் திருவிழா ரத்து செய்யப்பட்டது.

காலங்காலமாக நடைபெறும் சித்திரைத் திருவிழா தடைபடக் கூடாது என்று மக்களின் கோரிக்கை ஏற்று அரசு கோயில் வளாகத்திலேயே சித்திரைத் திருவிழாவை நடத்தி அதை பக்தர்களுக்கு அரசு தொலைக்காட்சியிலும், யூடியூப் சேனல்களிலும் ஒளிபரப்பு செய்தனர். இந்த ஆண்டாவது சித்திரைத் திருவிழா நடைபெறும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த முறையும் கொரோனா இரண்டாவது அலை முக பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முழு ஊரடங்கு பதில் கூட்டம் சேரும் இடங்களுக்கு கட்டுப்பாடுகள் மத்திய அரசு அறிவித்துள்ளது. அதில் முக்கியமாக 50 சதவீதத்தில் திரையரங்குகளுக்கு அனுமதி, மத நிகழ்வு கோயில் திருவிழாவுக்கு தடை என்று அரசு முக்கிய கட்டுப்பாடுகள்.

சில வாரங்கள் முன்பு வரை சட்டமன்ற தேர்தலுக்கான பிரச்சாரம் பொது கூட்டம் என அனுமதி கொடுத்த போது பரவாத கொரோனா திருவிழாவில் தான் பரவப் போகுதா என்று பக்தர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். நாளை சித்திரை திருவிழா நடத்த கோரி மதுரை தமுக்கம் மைதானம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு சமூக வலைத்தளங்களில் அழைப்பிதழ் ஒன்று வலம் வருகிறது.