திமுக தோல்வி உறுதி அறிந்து அப்செட் ஆன ஸ்டாலின்.! கவலை மறக்க கொடைக்கானல் அழைத்து சென்ற குடும்பத்தினர்.!

0
Follow on Google News

திமுக தலைவர் முக ஸ்டாலின் நேற்று குடும்பத்துடன் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தவர், அங்கு இருந்து கொடைக்கானல் புறப்பட்டு சென்றார், ஸ்டாலின் கொடைக்கானல் செல்வதற்கு முதல் நாள் தனது வீட்டில் வேலை செய்த இருவர் மற்றும் சுமார் நான்கு நாட்களுக்கு தேவையான சமையல் பொருட்கள் வாகனம் மூலம் சென்னையில் இருந்து கொடைக்கானலில் ஸ்டாலின் தங்கி இருக்கும் சொகுசு பங்களாவுக்கு சென்றதாக கூறபடுகிறது.

முக ஸ்டாலின் குடும்பத்துடன் திடீர் பயணமாக கொடைக்கானல் சென்றது கட்சியினர் யாருக்கும் தகவல் அனுப்ப படவில்லை, மேலும் கொரோனா தொற்று காரணமாக ஸ்டாலின் செல்லும் வழியில் யாரும் வரவேற்பு அளிக்க வேண்டாம், ஸ்டாலினை சந்திக்க யாரும் முயற்சிக்க வேண்டாம் என கட்சியினருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கூறபடுகிறது, இந்நிலையில் ஸ்டாலின் குடும்பத்துடன் கொடைக்கானல் சென்றது பின்னணி குறித்து பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளது.

அதில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக-அதிமுக இடையே கடும் இழுபறி ஏற்பட்டுள்ளதால் அடுத்தது யார் ஆட்சி அமைப்பது என்பதில் கடும் குழப்பம் நீடித்து வருவதாக தேர்தல் முடிந்த பிறகு தகவல் வெளியானது, இந்நிலையில் அடுத்தது திமுக தான் ஆட்சி அமையும் என திமுக தேர்தல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் அளித்த ரிப்போர்ட், மேலும் தனக்கு நெருக்கிய அரசு உயர் அதிகாரிகள் கொடுத்த தகவல்களை நம்பி முக ஸ்டாலின் அடுத்தகட்ட நடவடிக்கையில் இறங்கினர்.

தேர்தல் முடிவு வந்ததும் முதல்வராக பதவி ஏற்பதற்கான ஏற்பாடு, அமைச்சர் பட்டியல் தயாரிக்கும் பணி என பிஸியானார் ஸ்டாலின், இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடந்து முடிந்த தேர்தல் குறித்த உளவு துறை ரிப்போர்ட் ஸ்டாலினுக்கு சென்றுள்ளது அதில், கடும் இழுபறியில் நீடித்து வரும் தொகுதிகளில் பெரும்பாலான தொகுதிகளில் அதிமுக கூட்டணி வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் சென்றுள்ளது.

இதனை தொடர்ந்து தனது கட்சி நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பேசிய ஸ்டாலின், தேர்தல் நிலவரம் குறித்து கேட்டுள்ளார், அதில் அவர்கள் கூறியதாவது, கடைசி நேரத்தில் நமது கட்சியினர் அதிமுகவினரிடம் விலை போகிவிட்டனர், பணத்தை பெற்று கொண்டு உள்ளடி வேலைகளை நிறைய செய்துள்ளதாக தெரிவித்தவர்கள். அதிமுக தரப்பில் இருந்து வாக்காளர்களுக்கு வைட்டமின் ப அதிகமாக விநியோகம் செய்யப்பட்டுள்ளது, திமுக தரப்பில் இருந்து கொடுக்கப்பட்ட வைட்டமின் ப கட்சி நிர்வாகிகள் வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்யாமல் அமுக்கி கொண்டனர் என தெரிவித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து கட்சி முக்கிய தலைவர்களை அழைத்து EVM மெஷின் மீது சதேகத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள செய்துள்ளார் ஸ்டாலின், இது தேர்தலில் திமுக தோல்வி அடைந்தால் EVM மீது குற்றம் கூற உதவலாம் என கூறப்படுகிறது, மேலும் அமைச்சர் பட்டியல் தயாரிக்கும் பணியை கைவிட்டு அப்செட் ஆன முக ஸ்டாலின் பெரும் சோகத்தில் இருந்ததை தொடர்ந்து கவலைகளை மறக்க அவரது குடும்பத்தினர் அவரை கொடைக்கானல் அழைத்து சென்றதாக தகவல் வெளியாகி உள்ளது.