ஏமாற்றிவிட்டு எஸ்கேப் ஆன பிரசாந்த் கிஷோர்.! முக்கிய அதிகாரிகளிடம் இருந்து ரகசிய ரிப்போர்ட்.! முக ஸ்டாலின் ஷாக்.!

0
Follow on Google News

தேர்தல் முடிந்ததும் 160 முதல் 180 தொகுதிகள் வரை திமுக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என ஐபெக் நிறுவனம் ஆய்வு செய்த ரிப்போர்ட் ஸ்டாலினிடம் கொடுத்து, அடுத்த முதல்வர் நீங்க தான் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என தெரிவித்துவிட்டு, உங்கள் கட்சி வேட்பாளர்களையும் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை பரிமாறி கொள்ளுங்கள் என தெரிவித்துவிட்டு மேற்கு வங்கம் தேர்தல் பணியை கவனிக்க சென்றுவிட்டார் பிரசாந்த் கிஷோர்.

இதனை நம்பி செம்ம குஷியான ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், மந்திரி சபை அமைக்கும் பணிகள், மற்றும் அரசு உயர் பதவிகளில் யாரை அமர்த்துவது என பட்டியலை தயார் செய்து வந்துள்ளனர் ஸ்டாலின் மற்றும் அவரது குடும்பத்தினர், ஆனால் தேர்தல் முடிந்து ஒரு வாரம் கடந்தும் அரசு உயர் அதிகாரிகள் மற்றும் சென்னை கோட்டையில் உள்ள உயர் அதிகாரிகளிடம் எந்த ஒரு அசைவும் ஸ்டாலினை நோக்கி நகரவில்லை என்பதை உணர்ந்த ஸ்டாலின் பெரும் குழப்பத்தில் இருந்து வந்துள்ளார்.

எப்போதும் தேர்தல் முடிந்ததும் இரண்டு தினத்தில் அடுத்தது யார் ஆட்சி அமைப்பது என துள்ளியமாக கணித்து தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே வெற்றி பெறப்போகும் தலைவருக்கு கோட்டையில் உள்ள உயர் அதிகாரிகள் தூதுவிடுவது வழக்கம், ஆனால் இம்முறை அப்படி ஏதும் நடைபெறாமல் இருப்பது ஸ்டாலினுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது, இதனை தொடர்ந்து அவரே முன் வந்து அரசு உயர் அதிகாரிகள் மற்றும் கோட்டையில் உள்ள முக்கிய அதிகாரிகளுக்கு தூது விட்டுள்ளார் ஸ்டாலின்.

ஆனால் அவர்களிடம் இருந்து எந்த ஒரு பதிலும் இல்லாததால் தொடர்ந்து அவர்களை வற்புறுத்தி கேட்க, உளவு பிரிவு அளித்த தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளனர், அதில் மார்ச் மாதம் இறுதி வரை திமுகவுக்கு சாதகமாக இருந்த தமிழக தேர்தல் களம், தேர்தலுக்கு ஒரு வாரம் முன்பு அதிமுகவுக்கு சாதகமாக மாறியுள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் 125 முதல் 135 தொகுதிகள் வரை அதிமுக கூட்டணி கைப்பற்றும் என்று அவர்கள் தெரிவித்துள்ளார்

இந்த தகவலை சற்றும் எதிர்பாராத முக ஸ்டாலின், பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் தன்னை ஏமாற்றி விட்டாரோ.? என தனது குடும்ப உறுப்பினர்களிடம் புலம்பி வந்த முக ஸ்டாலின், அமைச்சர் பட்டியல் தயாரிப்பதை பாதியிலே நிறுத்திவிட்டு சோகத்தில் மூழ்கினார், இதனை தொடர்ந்து கடும் சோகத்தில் இருந்த ஸ்டாலினை நான்கு நாட்கள் பயணமாக கொடைக்கானல் அழைத்து சென்றுள்ளார்கள் அவரது குடும்பத்தினர், இந்த பதற்றத்தின் வெளிப்பாடு தான் கடந்த இரண்டு நாட்களாக வாக்கு என்னும் இயந்திரத்தின் மீது சந்தேகம் ஏற்படும் விதத்தில் ஸ்டாலின் தூண்டுதலின் பேரில் திமுக முக்கிய தலைவர்கள் தொடர்ந்து அறிக்கை வெளியிட்டு வருவது என தகவல் வெளியாகி உள்ளது.