ஒரே துண்டு சீட்டு, இடம் மற்றும் வேறு.! ஒரே மாதிரி மூன்று இடத்தில் பிரச்சாரம் செய்த ஸ்டாலின்.! துண்டு சீட்டை மாற்றவில்லையா.?

0
Follow on Google News

தமிழக சட்டசபை தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வரும் நிலையில், திமுக- அதிமுக இரண்டு கூட்டணி கட்சிகளுக்கும் இடையே யார் அடுத்தது ஆட்சி அமைப்பது என்பதில் கடும் போட்டி நிலவி வருகிறது, இந்நிலையில் தேர்தலுக்கு இன்னும் குறுகிய நாட்களே உள்ளதால் இரண்டு கட்சிகளுக்கும் பிரச்சாரத்தை தீவிர படுத்தி வருகின்றனர், ஒரு புறம் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மறு புறம் திமுக தலைவர் முக ஸ்டாலின் என இருவரும் தமிழக முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

30ஆம் தேதி விருதுநகரில் பிரச்சாரத்தை மேற்கொண்ட திமுக தலைவர் முக ஸ்டாலின், அதன் பின்பு தொடர்ச்சியாக தேனி, திண்டுக்கல், உடுமலை பேட்டை என அடுத்தடுத்து 31 ஆம் தேதி வரை பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார், ஆனால் திமுக தலைவர் முக ஸ்டாலினின் பிரச்சாரத்தை நேரலையில் தொடர்ந்த பார்த்து வருபவர்களுக்கு, இது நேரடி ஒளிபரப்பா.? அல்லது விருதுநகர் பிரச்சார வீடியோவின் மறு ஒளிபரப்பா என சந்தேகம் எழுந்தது.

பிரச்சாரத்துக்கான இடங்கள் வேறு இடங்களாக இருந்தாலும், திமுக தலைவர் முக ஸ்டாலின் பேசிய பேச்சுக்கள் ஒரே மாதிரியாக இருந்தது. பிரதமர் இரு தினங்களுக்கு முன் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது, திமுகவை கடுமையாக விமர்சனம் செய்ததற்கு பதிலடி கொடுத்து பேசியது, அதிமுக குறித்த விமர்சனம், மேலும் தொலைக்காட்சியில் வெளியான கருத்து கணிப்பு பற்றி பேசியது என பெரும்பாலான பேச்சுக்கள் ஒரே மாதிரியாக இருந்தது.

இந்த நேரலை காட்சிகளை இணையத்தில் பார்த்தவர்கள், திமுக தலைவர் முக ஸ்டாலினுக்கு துண்டு சீட்டு எழுதி தருகின்றவர் விடுப்பில் சென்றுவிட்டார், அதனால் ஒரே பேப்பரை பார்த்து அணைத்து இடங்களிலும் முக ஸ்டாலின் பிரச்சாரம் செய்து வருவதாக கருத்து தெரிவித்து வருகின்றனர், தொடர்ந்து இதே போன்று இதற்கு முன்பு ஒரே டயலாக்கை பல இடங்களில் ஸ்டாலின் பேசியது கேலி கிண்டலுக்கு ஆனது குறிப்பிடத்தக்கது.

அதில் அவர் நான் வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று பேச மாட்டேன், கலைஞரின் மகன் உண்மையை மட்டும் தான் பேசுவேன் என இது போன்று ஒரே டயலாக்கை பல மேடைகளில் பேசியது சமூக வலைத்தளத்தில் அதிகம் ட்ரோல் செய்யப்பட்டதை தொடர்ந்து அடுத்து இந்த டயலாக்கை மேடைகளில் பேசுவதை ஸ்டாலின் நிறுத்தி விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.