கொஞ்ச நேர தொழில்நுட்பக்கோளாறு. பொறுத்துக் கொள்ள முடியாமல் ரசிகர்களால் சூறையாரப்பட்ட திரையரங்கு.!

0
Follow on Google News

பவன் கல்யாண் திரைப்படம் வெளியாகிறது என்றாலே தெலுங்கானா ரசிகர்களால் திருவிழா கோலாகலமாக காட்சி அளிக்கும். தெலுங்கானாவில் அப்படித்தான் சில தினங்கள் முன்பு தெலுங்கு ஸ்டாரான பவன் கல்யாண் நடித்து ஏப்ரல் 8-ஆம் வெளிவந்த திரைப்படம் வக்கீல் சாப். இந்த திரைப்படம் நடிகர் அஜித் நடித்த நேர் கொண்ட பார்வை திரைப்படத்தின் தெலுங்கில் டப்பிங் செய்த படம். இந்த திரைப்படம் பவன் கல்யாணுக்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளிவந்த திரைப்படம்.

தமிழில் அஜித் எப்படியோ அப்படித்தான் தெலுங்கில் பவன் கல்யாண். ரசிகர்களை நீண்ட நாள் காக்க வைத்து வெளிவர இருக்கும் திரைப்படம் என்பதால் திரையரங்கில் வெளியான தினத்தன்று ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்து இருந்தனர். திரையரங்கில் வெளியான திரைப்படத்தை ஆரவாரத்துடன் பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் திடீரென்று தொழில்நுட்ப கோளாறால் காட்சிகள் நிறுத்தப்பட்டது. கொந்தளித்த ரசிகர்கள் கோவத்தில் கத்தி ரகளையில் ஈடுபட்டனர்,

திரையரங்கை சூறையாடி அடித்து நொறுக்கினர். பட்டாசுகளை கொளுத்தி திரையரங்கில் அங்கும் இங்கும் வீசினர். கற்களை கொண்டு திரையரங்கு கண்ணாடிகளை உடைத்தனர். சிறிது நேரத்தில் கலவர பூமியாக மாறியது திரையரங்கம். நடிகர் பவன் கல்யாணுக்கு ரசிகர்களின் பட்டாளம் ஏராளம் ஆனால் இதை வைத்து பவன் கல்யாண் அரசியல் செய்ய நினைத்தபோது ரசிகர்கள் கொடுத்து ஏமாற்றமே.

ஆனால் திரைத்துறையில்ரசிகர்களின் ஆதரவு பவன் கல்யாணுக்கு குறைந்ததே இல்லை ஆனால் ரசிகர்கள் செய்த இந்தக் காரியத்தினால் அனைவரையும் முகம் சுழிக்க செய்துள்ளது. ஒரு நடிகருக்கு ரசிகராக இருப்பது நல்ல விஷயம் தான் ஆனால் இந்த அளவுக்கு வெறித்தனமா? என்று சமூக வலைத்தளங்களில் பவன்கல்யாண் ரசிகர்களுக்கு எதிரான கருத்துக்கள் உருவாகி வருகிறது.