அடிமைகள் முழு சங்கியாகவே மாறிவிட்டனர்.! இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என உதயநிதி எச்சரிக்கை.!

0
Follow on Google News

சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலைக்கு சூட்டப்பட்டிருந்த பெரியார் ஈ.வெ.ரா. பெயர் நீக்கப்பட்டிருப்பதாக அதிமுக அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக திமுக தலைவர் முக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையை Grand Western Trunk Road என மாற்றிட காபந்து அரசுக்கு எங்கிருந்து உத்தரவு வந்தது? எஜமானர்கள் கால்பிடிக்கும் வேலையா?

மேலும் தந்தை பெரியார் பெயர் கேட்டாலே நடுங்கும் மதவெறி சக்திகளின் ஆட்டமா? என காட்டமாக கேள்வி எழுப்பிய ஸ்டாலின், உடனடியாக மாற்றிட வேண்டும் , தாமதித்தால் மே.2-க்குப் பிறகு ஆணை வெளியாகும் என எச்சரித்திருந்தார், இதனை தொடர்ந்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது,

சென்னை பெரியார் சாலைக்கு Grand Western Trunk Road-அண்ணா சாலைக்கு Grand Southern Trunk Road-காமராஜர் சாலைக்கு Grand Northern Trunk Road என பெயர் மாற்றம் செய்துள்ளது அடிமை அரசு. எதிர்ப்புகள் வரவே, மாநகராட்சி-நெடுஞ்சாலை பதிவுகளில் பெயர்கள் வெவ்வேறாக உள்ளதென வினோத விளக்கம் தருகிறது.வேலுமணியின் உள்ளாட்சித்துறையும் – பழனிசாமியின் நெடுஞ்சாலைத்துறையும் கலந்தாலோசித்து சாலைகளுக்கு தலைவர்கள் பெயரை தொடர செய்திருக்க வேண்டும்.

ஆனால், அப்படி செய்யாமல் கல்லாக்கட்டும் அவசரத்தில் தேர்தலுக்கு முன்பே டெண்டர் விட்டு இந்த பெயர் குளறுபடியை அரங்கேற்றியுள்ளனர். ஆட்சி முடியப்போகும் இந்நேரத்தில்கூட முதலாளிகளின் எண்ணத்தை நிறைவேற்ற துடிக்கும் இந்த அடிமைகள் முழு சங்கியாகவே மாறிவிட்டனர். எங்களின் உணர்வோடு கலந்துள்ள தலைவர்களின் பெயர்களை நீக்குவது என்பது தமிழர்களின் தன்மானத்தை சீண்டிப்பார்க்கும் விஷயம். இதை உடனடியாக சரிசெய்ய வேண்டும் என உதயநிதி தெரிவித்துள்ளார்.