மீன்பிடி தடையை நீக்க வேண்டும்.! டாக்டர்.கிருஷ்ணசாமி வலியுறுத்தல்.!

0
Follow on Google News

மீன்பிடி தடை காலத்தை நவம்பர், டிசம்பர் மாதத்திற்க்கு மாற்ற வேண்டும். என புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழ்நாடு மீன்வளத்துறை அமைச்சருக்கு மனு அனுப்பியுள்ளார், அந்த மனுவில் அவர் குறிப்பிட்டதாவது, தமிழகத்தில் உள்ள 1000 கிலோ மீட்டர் நீள கடலோரப் பகுதிகளில் லட்சக்கணக்கான மீனவர்கள் மீன்பிடி தொழிலை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டு வாழ்கிறார்கள்.

ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் மீன்பிடி தடை காலமாக மாநில அரசு அறிவித்து நிவாரணம் வழங்குகிறது, ஆனால் இக்காலக்கட்டத்தில் மழை,புயல் போன்ற எவ்வித இயற்கை சீற்றங்களும் மீன்பிடித் தொழிலுக்கு இடையூறாக இருப்பதில்லை, எனவே ஏப்ரல் மற்றும் மே மதங்களில் மீன்பிடி தடைகாலம் என்பது அவசியமற்றது, அதேசமயம் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் அடைமழையும், புயல் சீற்றங்களும் ஏற்பட்டு மீனவர்கள் கடலுக்கு செல்ல முடியாத நிலையும்,

அதனால் அவர்கள் வருமானம் இன்றி அவதிப்படும் சூழல் ஏற்படுகிறது. தங்கள் வாழ்வாதாரத்திற்காக இயற்கை சீற்றங்களையும் கணக்கில் கொள்ளாமல் மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் உயிரிழப்புகள் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு முறையும் கடற்படை உள்ளிட்ட இராணுவத்தை பயன்படுத்தி மீனவர்களை மீட்கும் சூழல் உருவாகிறது.

எனவே ஒட்டுமொத்த மீனவர்களின் நலன் கருதி எவ்வித இயற்கை சீற்றங்களும் இல்லாத ஏப்ரல்,மே மாதங்களில் மீன்பிடித் தொழிலை அனுமதிக்கவும், இயற்கை சீற்றங்களால் மீனவர்களுக்கு பாதிப்பை உண்டாக்கும் நவம்பர்,டிசம்பர் மாதங்களில் மீன்பிடி தடை காலத்தை உரிய நிவாரணத்துடன் அமுல்படுத்துமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். என புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.