மோடியை கொன்றால் என்ன.? திமுக கூட்டத்தில் நெல்லை கண்ணன் சர்ச்சை பேச்சு.!

0
Follow on Google News

தொடர்ந்து அநாகரிகமாக சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகின்றவர் நெல்லை கண்ணன், நெல்லை மேலப்பாளையத்தில் இந்திய குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்.டி.பி.ஐ. சார்பில் 2019 ஆம் ஆண்டு பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆன்மீகச் சொற்பொழிவாளர் மற்றும் பட்டிமன்ற நடுவரான நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசுகையில் அமித்ஷா சோலியை முடிக்க வேண்டும் என பேசி பெரும் சர்ச்சையில் சிக்கினார்.

இதன் பின்பு தமிழகம் முழுவதும் நெல்லை கண்ணனுக்கு எதிராக நடந்த போராட்டத்துக்கு பின் அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டவர் பின்னர் ஜாமினில் வெளியே வந்தார், இந்நிலையில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்த நெல்லை கண்ணன், நெல்லையில் அமித்ஷா குறித்து பேசி கைது செய்த பின் கவனமாக எந்த ஒரு சர்ச்சையில் சிக்காமல் இருந்து வந்தவர் மீண்டும் பிரதமர் குறித்து பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

நேற்று திருநெல்வேலி பேட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் திமுக வேட்பாளர் லட்சுமணனை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க நெல்லை கண்ணன் பேசினார் அப்போது அவர் பேசியதாவது, திமுக வேட்பாளர்கள் இப்போதே மந்திரி நினைப்பில் உள்ளனர், இப்படி அசால்ட்டாக மெத்தன போக்கில் இருந்துவிடாதீர்கள், ஓட்டு பெட்டி இருக்கும் இடங்களில் தினமும் 5,000 பேர் வீதம் பாதுகாப்பில் இருக்க வேண்டும் என கேட்டு கொண்ட நெல்லை கண்ணன்.

அசாம் தேர்தலில் ஓட்டுப் பெட்டியை பாஜக வேட்பாளர் காரில் கொண்டு சென்றுள்ளனர், அதை தவறாக கொண்டு சென்றதாக சொல்கிறார் மோடி, இந்த மோடியை கொன்றால் என்ன.? இப்படி பேசினால் என்னை நாளைக்கு எடப்பாடி பழனிசாமி பிடித்து சிறையில் போட்டு விடுவார், 78 வயதில் சிறை செல்ல வேண்டும் என நெல்லை கண்ணன் பேசினார், இவர் பிரதமர் குறித்து பேசிய சர்ச்சைக்குரிய பேச்சு சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.